பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

தேவார ஒளிநெறிக் கட்டுரை

பேய்களும் சூழ, முழவம் - குழல் - மொந்தை முழங்கச், சடை சுழலப், பார்வதியுடன் எரியாடுவர்.

சிவபிரான் ஆடியருளும் திருமஞ்சனம் அக்கினி (யுகாந்தாக்கினி).

48. ஐந்தெழுத்து (42)

[நமசிவாய]

அம்மையினும், இம்மையில் வினையடர்த்தும் பொழுதும், வெய்ய நரகம் விளைந்தபொழுதும் துணையாய் நிற்பது அஞ்செழுத்து. அஞ்செழுத்து வேதியர்க்கு அந்தியுள் மந்திரம்; பத்தர்க்கு நிறைபொருள்; தன்னை விரும்பி ஒதினவர்க்கு இன்பம் அளிக்கும், பிறப்பை அறுக்கும், அண்டம் அளிக்கும், சிவமுத்தி காட்டும், மாடு (செல்வம்) அளிக்கும், பீடையைக் கெடுக்கும், இடரைக் கெடுக்கும், நமன்தமர் செய்யும் அல்லலைக் கெடுக்கும், அஞ்செழுத்து இறைவனுக்கு உகந்தது, தீண்டற்கரிய தன்மையது, நீறணிவார்தம் வினைப்பகைக்கு அத்திரம் ஆயது, மறையாகி-மந்திரமாகி-வானவர் சிந்தையுள்நின்று ஆளுவது, யமனை அச்சுறுத்தி உதைத்தது, நமசிவாய என்னும் நாமத்தை இன்சொலால் நயமாக ஒதினால் இயமன் தூதரும் அஞ்சுவர், உருத்திரலோகம் கிடைக்கும், எல்லாத் தீங்கும் நீங்கும், நன்னெறி கூடும், செல்வம் மல்கும், வல்வினை சிந்தும், வானவராத் தகுதி கிடைக்கும், வெஞ்சொலார் அணுகார். நமசிவாய என்னுந் திருநாமம் செம்பொற்றிலகம் போன்றது, மணங்கொள் நறுமலர் ஒப்பது, வேத நான்கினும் மெய்ப்பொருளாவது; ஐந்தெழுத்து வண்டோதரி விரும்பி ஒதிய மந்திரம், பிரமனும் மாலும் ஓதிய மந்திரம், இராவணன் ஓதி உய்ந்த மந்திரம், ஐந்தெழுத்தை ஒதிய பயனாய் ராவணன் இறைவனால் வாள் ஒன்று அளிக்கப் பெற்றான். அஞ்செழுத்தை ஓதி நல்லராய் நீறணிந்தவரை வணங்கின பெருமான் குலச்சிறை நாயனார். ஐந்தெழுத்தைக் காதலுடன் நெஞ்சு நைந்து கசியக் கண்ணீர் மல்க நினைந்து நாடோறும் ஒதவேண்டும்;