பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49. சிவனது அழகு, கோலம், சரிதை, வண்ணம்

47


உருத்திராக்க மாலைகொண்டு ஜெபிக்கவேண்டும். சுகத்தினும், துக்கத்தினும், தும்மல், இருமல் தொடர்ந்த பொழுதும், வினையடரும் பொழுதும், ஐந்தெழுத்தே துணை.

49. சிவனது அழகு, கோலம், சரிதை, வண்ணம், வர்ணனை, வேடம் [98, 111, 123, 204, 205, 209]

1. கோலம் [111]:- அர்த்தநாரீசுரர் கோலம், அரவணி கோலம், அலங்கார கோலம், ஆடுங் கோலம், உமாமஹேசுர கோலம், கயிலைக் கோலம், செஞ்சடைக் கோலம், திரிதருகோலம், திருநீற்றுக்கோலம், பலிக்கெழு கோலம், பூஜை யலங்கார கோலம், மயானத் துறைதரு கோலம், மாலயனறியாக் கோலம், வருகைக் கோலம், விடைமேற் பொலிகோலம் முதலிய பற்பல கோலங்கள் விவரிக்கப்பட்டுள. அர்த்தநாரீசுர கோலத்தைக் கூறக் குணமாம். மாலயனறியாக் கோலத்தை ஏத்தி நின்றாடிப் பாடினால் கூற்றுவன் நலியான்.

2. சரிதை [123]:- சிவபிரான் விருது இலங்கும் சரிதைத் தொழிலர். அவர் சரிதைகள் பலப்பல. அவர் பெண்ணோர் கூறினர், பேயொடாடுவர், இசைபாடுவர், முக்கண்ணர் ; வளையினரது (மாதரது) மனைதொறும் திரிதரு சரிதையர், அரவம் ஆட்டுவர், புலித்தோலுடுப்பர், அனலேந்துவர், இரவிலாடுவர்.

3. வண்ணம் [304]:- சிவபிரான் வண்ணம் - அணி வண்ணம், அந்திவண்ணம், அழல்வண்ணம், அளக்க வொண்ணா வண்ணம், ஆண் இணை பிணைந்த வண்ணம், எரிவண்ணம், ஒருவனுமே பலவாகி நின்றவண்ணம், கனல் வண்ணம், காணொணா வண்ணம், சங்கொளி வண்ணம், சுடர் வண்ணம், செஞ்சுடர் வண்ணம், தூவண்ணம், பண்ண வண்ணம், பவள வண்ணம், பாகம் பெண்ண வண்ணம், பால் வண்ணம், மூவா வண்ணம், வான் வண்ணம், விண்ண விண்ணம் - இங்ஙனம் வண்ணம் ஆயிரம் உடையான் சிவன்.