பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

தேவார ஒளிநெறிக் கட்டுரை

4. வேடங்கள் [209]:- ஆடும்வேடம், உமையோடு கூடிய வேடம், கடுப்படுத்த மேனியர் (சமணர்) தவம் வெறித்த வேடம், கரி கதறப் போர்த்த வேடம், கானிடை யாடு வேடம், சுடலையில் நடநவில் வேடம்; சைவவேடம், பண்டங்கவேடம், பலியூண் கொள் வேடம், பிறைசூடு வேடம், பெண் விரவிய வேடம், மறைபாடியாடு வேடம், வினையை வென்ற வேடம், விஜயற்கருளிய வேடம் ஆகப் பலபல வேடமுடையார் இறைவன். இவ்வேடங்களைத் தியானித்துப் போற்றி செய்தால் ஒதி யுனர்ந்தார்க்கும் அகப்படாத அரும் பொருள்களெல்லாம் விளங்கும்; கண்குளிரும், சிந்தை குளிரும், செவிகள் நிரம்பும், கவிகள் பாடலாம், துளக்கம் நீங்கும், தூய்மை வரும், பங்கம் ஒழியும், பழி நீங்கும், புகழ் உண்டாகும், புண்ணியம் சேரும், மந்திரமெனப் பலன்தரும், மயக்கந் தீரும், மருந்து போலுதவும், மாசு நீங்கும், மானங் காக்கும், வான்வழி காட்டும், விதியழியும், விளக்கம் பெறலாம், வினை விடும், வீடு கூடும்.

5. வர்ணனை [205]:- சிவபிரான் குழலார் சடையர், கொக்கின் இறகர், தவளநீற்றர், கோவணக் கீளர், தழலார் மேனியர், அவரது பூண்-நாகம், தார்-கொன்றை, பாகம்-பெண், அவர் ஏற்பது பலி, ஏறுவது ஏறு, பாடுவது மறை, பூசுவது நீறு; அவர் புற்றரவர், நெற்றிக் கண்ணர், ஒற்றை விடையர், புரிநூலர், பொடியணி மார்பினர், புலியதளாடையர், பூதப்படையினர், வெடிதரு தலையினர். அவருக்குப் பொன்னியல் மேனி, மின்னியல் சடை, வேழவுரி.

6. அழகு [98]:- சிவபிரான் அண்டமும் எண்டிசையும் நிறைந்து நின்ற அழகர்; அரக்கன் ஆற்றல் அழித்த அழகர்; அரவரை அழகர்; அனலாடிய அழகர்; ஆலநீலழகர்; அறஞ்சொன்ன அழகர்; ஆவியுள் நின்றருள் அழகர்; காளியேத்தும் அழகர்; நடங் குறையா அழகர்; பாடலோ டாடலழகர்; பார்வதி பாகராய் விடையே றழகர்; புனல் செஞ்சடையில்