பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51. சிவனது தன்மை, பெருமை, குணங்கள்

49

வைத்த அழகர், மதிக்கண்ணி யழகர்; மாலை யழகர்; மேனியழகர்; முப்புரஞ் செற்ற அழகர்.

50. சிவபிரான் சடை [112]

சடை அழகியது, நீண்டது, குளிர்ந்தது, சிவந்தது, திண்ணியது, நெடியது, பின்னியது, புல்லியது, முதிர்ந்தது, வளர்ந்துள்ளது, தீப்போன்றது, ஈரமாயது, ஏலங் கமழ்வது, ஒளி மிகுத்தது, மணங கமழ்வது, கற்றை திகழ்ந்திலங்குவது, குழலுடன் விளங்குவது, தாழ்ந்து விளங்குவது, சுரும்பும் தும்பியும் சூழ்வது, சுற்றிவைக்கப் பட்டுளது, தழைத்துள்ளது, நிமிர்ந்த தோற்றத்தது, பொன்னிறத்தது, பொன் நீர்மையது, நிறைந்துள்ளது, வரிசையாயுள்ளது, விரிந்துள்ளது, படர்ந்துள்ளது, பவள நிறத்தது, பலவாயது, பள்ளமாயது, கட்டப் பட்டது, பின்புறந் தாழ்வது, புரிகொண்டது, பெருமை வாய்ந்தது, மின்போல விளங்குவது, கங்கை பாய்வதால் நனைந்துள்ளது, முடியப்பட்டது, வட்டமாய் அமைந்தது, மகிழ்ச்சி தருவது, புனல் ஒடுங்க இளம்பிறை தோன்றப் பொலிவது, கங்கை பாய்வதாற் பள்ளம் ஏற்பட்டுப் பொலிவது; அரு, இண்டை, இளம்பிறை, கங்கை, கடப்ப மாலை (மராம் கோதை), கரந்தை, கொன்றை,தலை (தலைமாலை), மலர்கள், மேகங்கள் இவை பொருந்தப் பொலிவது, பின்னிய நீண்ட தமது தாழ்ந்த சடையை இறைவர் ஏற முடிப்பர்.

51. சிவனது தன்மை, பெருமை, குணங்கள் [124]

1. அகம், புறம் உள்ளார் [124 (1)]:- சிவபிரான் அகத்தும் புறத்தும் உள்ளவர்.

2. அடியாரும் சிவனும் [6, 124 (2)]:- இறைவர் தம்மைக் கைதொழுதேத்தும் அடியார்கள் ஆகத்தும் மனத்தும் இருப்பர். அடியார்கள் புகழ மகிழ்வர்; அடியார்கள் உள்ளம் உருக அவர்களுடன் இருப்பர். தம்மை மதித்து நினைப்பவர் உள்ளத்திருந்து மகிழ்வர். தம்மை எப்போதும் ஏத்தும் அடியார்தம் மனத்தும்