பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51. சிவனது தன்மை, பெருமை, குணங்கள்

51

6. அருத்தம் [124 (8)]:- இறைவரே பொருள். இறைவரே இன்பம்.

7. அருமை [124 (9)]:- இறைவர் அருமை அளப்பரியது.

8. அருள் பாலித்தல் [124 (10)]:- இறைவர் அடியார்க்கு அருள் பயக்கும் நிழலாவர்; அவர் தேவர்கள் உய்ய அருளினவர்; அருள்பவர்; அடியார்கள் தொழ அருளுபவர்; அழுது அரற்றும் அடியார்களைத் தப்பாமே காப்பவர். ஞானr மார்க்கத்தில் தம்மை அடைய முயல்பவ ருக்கு ஞானம் அருள்பவர். அடியாரது ஆசைதீரக் கொடுப்பர். உலகம் செழிக்கவேண்டித் தேவியோடும் பொலிவர். உள்ளே உருகில் உவகை கொடுப்பர். இனியன அல்லாதவற்றையும் இனிமையாக்கித் தர வல்லர். உண்மை அன்புடன் தம்மை நினையவல்ல அடியார்களுக்கு அரிய காட்சிகளை அளிப்பர். எங்கே பிறந்தவராயினும் சரி, யாதாகிப் பிறந்திருந்தாலும் சரி, தமது அடியாராயின் இதோ உள்ளேம் என்று தடையின்றி அருள்புரியும் தயாநிதி. காலையும் மாலையும் மலர்ப் பூசனைத் தொண்டு இயற்றும் அடியார்களுக்கு அருள் செய்யும் பான்மையர். அடியார்தம் ஐயம் அகற்றுபவர். நாற்றிசை அடியார்க்கும் அருள்பவர். ஞான யோகிகளுக்குச் சாரூபம் அளிப்பவர். தம்மைப் பேசிப் பிதற்றப் பெருமை தருபவர். தம்மையே தாயாகவும் தந்தையாகவும் கொண்டவருக்கு அருள்செய்யும் அண்ணல். பாசங்களையும் பந்தங்களையும் நீக்குபவர். சோர்வுறுங் காலத்து உதவுபவரும் தம்மைத் தொழுவிப்பவரும் அவரே. தொண்டர்களுக்குத் தமது பாதநீழலைத் தரும் அருளாளர். நம்மை நற்றவ வழியில் நிறுத்தி, உய்யும்வகை அருள்பவர். தம்மை நாடினவர்க்கு அருள் பாலிப்பவர். தமது மனத்தை ஒருவழிப்படுத்தித் தியானிக்கும் பெரியோர்களுக்குச் சாயுஜ்ய பதவியை அளிப்பவர். தொண்டுக்கு உகப்பவர். அவரைப் பேசினால் அவர் வந்து உதவுவார். சதா காலமும் பெம்மான் எனத் தம்மை யேத்தும் அடியாருக்கு