பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

தேவார ஒளிநெறிக் கட்டுரை

அருளுபவர். நினைக்கும் வரமெலாம் அளிக்கும் வள்ளல். வழிபடும் அடியார்களுக்கும் தவத்தினர்க்கும் தமது திருவடி நீழலைத் தருபவர். அடியாரது குறை தவிர்ப்பவர். கங்கைக்கும் பிறைக்கும் தமது சடையில் இடந் தந்த பேரருளாளர். அவர் அருட் ப்ரகாசமே எங்கும் நிறைந்துள்ளது.

9. ஆட்கொள்ளுதல் [124 (15)]:- இறைவர் ஆட்கொள்ளும் வண்ணமும் அவருடைய மாண்பும் அளவற்ற வகையன. அவை சொல்ல முடியா. யார் அவரை நிலையாக விரும்பிச் சரணடைகிறார்களோ அவர்தமை விலையாக ஆட்கொள்ளுவர்: கனிந்த அன்புடையவரைக் கலந்து ஆட்கொள்ளுவர். நானாவித உருவாக வந்து நம்மை ஆட்கொள்ளுவர். வஞ்சனை வடிவெடுத்து ஆட்கொள்ளுவதும் அவரது தன்மை.

10. ஆண்,பெண், அலி, பேடு [124 (16)]:- இறைவர் ஆணுமல்லர், பெண்லுமல்லர், பேடுமல்லர். அவர் ஆணுமாவர், பெண்ணுமாவர், அலியும் ஆவர்.

11. ஆதி, அந்தம், நடு ஆவர் [124 (17)]:- இறைவர் ஆதி ஆவர், அந்தம் ஆவர், நடு ஆவர், பிறப்பாவர், இறப்பாவர்; தோற்றமாவர், இறுதியாவர்; வித்து ஆவர், ஊழி ஆவர்.

12. ஆளுதல் [124 (18)]:- இறைவரே உலகாளுடையார், உலகாளவல்லார், முற்றும் ஆள்வர்.

13. இயல்பு [124 (22)]:- இறைவர் இமையவர் தொழும் இயல்பினர். இயல்பு அறியப்படாதவர், என்று மோரியல்பினர் என நினைதலரியவர் ; ஓரியல்பில்லாத உருவினர்; நினைய ஒண்ணா இயல்பினர்; பலி கொள்ளுதலும், நீறு பூசித் திரிதலும் அவர் இயல்பு.

14. உடைமை [124 (34)]:- குன்றமெலாம் உடையர், ஞாலமெலாம் உடையர், உலகே ழுடையர், சேடெலாம் உடையார், ஞானவாழ்க்கை உடையார், தான வாழ்க்கை உடையார், மான வாழ்க்கை உடையார், வான வாழ்க்கை உடையார், தவமுடையார், பாமாலை உடையார்