பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51. சிவனது தன்மை, பெருமை, குணங்கள்

53

பரவுவாரையும் உடையார், பழித்திகழ்வாரையும் உடையார்.

15. உண்டில்லை என நிற்பர் [124 (25)]:- அல்லர் ஆவர் என நிற்பார், உண்டிலை என நிற்பார், உயிர்கட்குயிராய் உளர் இலர் என நிற்பார்.

16. கொள்கை [124 (77)];- இறைவர் கொள்கைக்கு அளவில்லை. அவர் உயர்ந்த கொள்கையர், குற்றமிலாத கொள்கையர். குற்றமொழித்தருளும் கொள்கையர்; கேடில் கொள்கையர், நலமலி கொள்கையர்; வேடஞ்சூழ் கொள்கையர்-அதனால்-அரவு அணிவர், ஆனஞ்சாடுவர், எரியேந்துவர், கங்கை தரிப்பர், கோலவடிவு கொள்வர், கோவணம் உகப்பர், சூலமேந்துவர், திங்கள் சூடுவர், நடம் புரிவர், பாமாலை நாடுவர், புலித்தோலுடையர், மங்கையை மணப்பர், மழு எந்துவர், விடைக்கொடியேந்துவர்.

17. சிவனும் வேதவேள்வியும் [124 (91)]:- வேத வேள்வியாகிய நன் குடையை இறைவர் கொண்டுள்ளார். அவரே வேதவேள்வி யாயினார்.

18. சிவனே அயன் மால் [124 ( 93)]:- சிவபிரான் தாமரை மலரில் வீற்றிருக்கும் அயனே ஆவர். ஊழி பந்தத்தில் மால், அயன் இருவரோடுங் கூடி விளங்குவர். சிவன், மால், அயன் வேறல்ல.

19. சோதி [124 (105)]:- இறைவனது ஜோதி இளஞாயிற்றின் சோதி போன்றது, இறைவன் ஈறும் ஆதியுமாகிய ஜோதி; உருகுவார் உள்ளத்து ஒளிரும் சுடர்; உலகெலாம் கிறைங்க ஜோதி; உம்பர் உலகும் கடந்த ஒளி; கனகத்தினும் மிக்க சோதி; சுடர்ச் சோதியுட் சோதி; சுத்தமான சுடர்விடு சோதி; தொடர ஒண்ணாச் சோதி; துளக்கிலா விளக்கு; செழுஞ்சோதி, பரஞ்சோதி, நீங்காத சோதி, மன்னு ஜோதி, மெய்ச்சோதி; விதியாய ஜோதி, ஜோதிக்கப்பால் நின்ற ஜோதி;

20. ஞானமாவர் [124 (107)]:- இறைவன் பெரு வாகனமுடைய பெருமான். அவர் வாழ்க்கை ஞான வாழ்க்கை; அவர் ஞானத்திரள்.