பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

தேவார ஒளிநெறிக் கட்டுரை

21. தன்மை, செய்கை [124 (1.15)]:- இறைவர் தன்மை, தலையாயது, சாலவும் இனியது; அவர் அயனும் மாலும் அறியாத தன்மையர், ஆருயிராந் தன்மையர், தந்தையாம் தன்மையர்; தாயாம் தன்மையர், தம்மை நினைப்பார்க்குத் தாயென நிறைந்த தன்மையர், ஊன் கலந்து உண்ணல் நன்றென்பாரும் தீதென்பாரும் ஆன தொண்டர்கள் அன்புடன் பேசநின்ற தன்மையர். அவர் பஞ்சபூத உறவினராய், ஐம்புலனாய் ஐந்திணை(நிலம்)யாய், நான்கு கரணமாய், அவையவை சேரும் பயனுருவாய், பிறவுருவாய் விளங்கி நிற்கின்றார்; தனித்தவராய் (ஒருவராய்)நிற்பார்; மால், அயன் என இருவராய் நிற்பார்; மும்மூர்த்திகளாய்ப் பொலிவார்; மூன்று காலமாய், நான்மறையாய், ஐந்து பூதமாய் (புலனாய்), அறுசுவையாய், ஏழோசையாய், எண்குணத்தராய், அட்ட மூர்த்தியாய் விளங்குவார். உயிர்களுக்குள்ளே ஆவியாய் ஓங்கும் அவர் தன்மையை விண்ணுளாரும் அறிகிலார். அவர் தோற்றம் கீழுலகும் மேலுலகும் ஓங்கி யெழுமேனும் அது காண அரியது, ஆயினும், அவர்தன்மையை உரையாதாரில்லை, பரவாதாரில்லை. காரண காரிய நியாய வாத தருக்க இலக்கணங்களால் அவர் தன்மையைச் சோதிக்க இயலாது, (ஆதலால்) சோதிக்க வேண்டாம்.

22. தன்மை, செய்கை அறியப்படாதவர் [124 (116)]:— அடிகள் செய்வன யாரால் அறியமுடியும்? எந்தையாரவர் எவ்வகையினரோ? அவர் தோற்றத்தின் நிலையை யாாறிவார்? அவர் பெரியர். அவர் தன்மையைச் செய்கையைப், பெற்றியை யாாறிவார்? ஓதியாரும் அவரை அறிவாரில்லை.

23. துயர் தீர்ப்பவர் [124 (1.6)]:- இறைவரானவர் அடியார்கள் படுதுயரைக் களைவார்; அவர்களுடைய அல்லலைத் தீர்ப்பார்; இடர்கள் பலவும் தீர்ப்பார்; உலகக்தின் துயரையே களைவார்.

24. இறைவரைத் தொழுபவர் எவரெவர் என்பது [241 (133)]:-அடியார், அண்டர், அதிகுணர்,