பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

தேவார ஒளிநெறிக் கட்டுரை

நல்லரென் றேத்துவார் ; பிறர் (நண்பிலார்) இறைவரைத் தீயர் என்பர். பகலும் இரவும் சேர்ந்த பண்பினர், பரமாய பண்பினர், பாலதாடிய பண்பர், அயனும் மாலும் அறியாத பண்பொடு நின்றவர், சமயத்திலுதவும் பண்பினர், பாடல்களாற் பரவப்படும் பண்பினர்.

27. பயனாவர் [124 (163)]:- நல்வினைப் பயனாவர்; பாடுவார் பாடற் பயனாவர்;

28. பாவம், பழிதீர்ப்பவர் [124 (169)]:- இறைவர் நினைத்துத் தொழுவாரது பாவந் தீர்ப்பார், பாதந் தொழுவாரது பாவம் தீர்ப்பார், பாவநாசர், நமது பழையபாவங்களைத் தீர்ப்பார், அடியார்க்கு வந்த பழியைப் போக்குவர்.

29. பான்மை [124 (170)]:- காலையு மாலையும் மலர் கொடு மாலை புனைந்து வழிபடும் அடியார்க்கு அருளும் பான்மையர் இறைவர்; அவர் பலி தேர்ந்து உழலும் பான்மையர்; பக்தர் கணங்கள் பணிந்தேத்தும் பான்மையர்; பன்றியின்பின் தேவியோடும் வேடனாய்ச் சென்ற பான்மையர்.

30. பிணி தீர்ப்பவர் [124 (171)]:- அடியாரது நோயையும் பிணியையும் தொலைப்பர்; பிணி தீர்க்கும் மணி ஆவர்.

31. பிணியிலர் [124 (172)]:- இறைவர் நோயிலர், பிணியிலர்.

32. பித்தர் [124 (173)]:— இறைவர் பித்த வடிவினர், பெற்றியாற் பித்த னொப்பார்.

33. பிறப்பிறப்பு இலாதவர் [124 (175)]:- அழிவிலாப் பெற்றியர்; பிறப்பிலார்; இறப்பிலார்; உலகிற் பிறவாதவர்; முடிவிலாதவர்; பிறப்பும் இறப்பும் அவரே.

34. பிறப்பிறப்பு ஒழிப்பார் [124 (176)]:- தம்மை நினைக்கும் அடியார்தம் பிறப்பையும் இறப்பையும் அறுப்பார்.

35. புகழ் [124 (177)]:- இறைவர் அந்தமில் புகழுடையார்; குற்றமிலாப் பெரும்புகழுடையார்; உரையார்