பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51. சிவனது தன்மை, பெருமை, குணங்கள்

57

பல்புகழார்; புகழலது இகழ்பழி யிலாதவர்; எல்லையில் புகழாளர்; என்றும் விளங்கும் பலவாய புகழார்; கீர்த்திமிக்கவர்; திக்கெலாம் நிறைந்த புகழார்; அயனும் மாலும் புகழும் பெருமான்; தேச நிறைந்த செம்மைப் புகழார்; பரக்குங் கீர்த்தி வாய்ந்தவர்; பல புகழ்ப் பரமர்; பழியிலாப் புகழார்; வைய நிறைந்த புகழாளர்.

36. பெருமை [124 (182)]:- இறைவர் முடிவிலாப் பெருமையர்; அளவிலாப் பெருமையர்; உம்பர்களைத் தாழ்த்தும் பெருமையர்; உம்பராலும் உலகினராலும் தம் பெருமை அளத்தற்கு அரியவர்; அயனும் மாலும் அளக்கல் ஒண்ணாப் பெருமையர்; யானையை உரித்துக் காமனை எரித்த பெருமையுடையார்; தம் பெருமை தாம் அறியார்; தோலுடையைப் பெருமையாக் கொண்ட பெருமையர்; பரப்புறு புகழ்ப் பெருமையாளர்; தலைக்குத் தலைமாலை யணிந்த பெருமையர்; பெருமை ஒராயிரம் உடையார்; அயனும் மாலுங் தேடி நிற்க எரியாய் வளர்ந்து நின்று மேலும் கீழும் காணாவகை நின்ற பெருமையர்; பலி திரிந்துண்ணுதில் அவர்க்கொரு பெருமை; பெருந்திறல் வாய்ந்த காமனை விழித்தெரித்தது இறைவர்க்கு ஒரு பெருமை போலும். நஞ்சம் உண்டு உலகுயிர்களை அளித்த அவர் பெருமையை உலகத்தவர் பேசலாமே ஒழிய அப்பெருமையை அளப்பரிது. இறைவரது பெருமையை உளத்திற் கொள்ளாத திருவிலி களுக்கு ஞானம் ஊட்ட இயலாது.

37. பெற்றி [124 (183)]:- உறைவது காட்டிடை யாயினும் இறைவர் பெரியர்; ஆாறிவார் அவர் பெற்றியை? தமது அடியையும் முடியையும் யாரும் காணாத பெற்றியர் அவர். ஆயினும் இறைவர்க்கு இன்ன ஊர், இன்ன பேர் எனத்தொண்டர்கள் பேசநின்ற பெற்றியராவர்; புத்தரும் சமணரும் தம்மைப் பித்தரெனக் கண்டு உகக்க நின்ற பெற்றியர், பித்தன் போன்ற பெற்றியர். பிரமனும் மாலும் தேடநின்ற இவர்தம் பெற்றிமையைப் பரவ வல்லவர்களுடைய மேல்வினை சிதறிப்போம்.