பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51. சிவனது தன்மை, பெருமை, குணங்கள்

59

அறியா வகை நின்றார்; அறிவானவர்க்கும் அறியாவகை நின்றார்; அன்புடன் ஏத்தாதவரிடம் பொருந்தார்; ஈன ஞானிகளுடன் கலவார்; உருகு சிந்தை யில்லார்க்கு அயலார்; அன்பு, பத்தி செய்யாதவரிடம் ஒளிப்பார்; கள்ள மனத்தாரைக் காணார்; கல்லா நெஞ்சில் நில்லார்; காதலில்லாதவரை இழிப்பார்; கொடியர் மொழியைக் கொள்ளார்; சிறியவர் சிந்தைக்கு எட்டார்; தேவர், அமரர்கள், திசைத் தெய்வங்கள் ஆதிய எவராலும் அறிய ஒண்ணார்; தேடுவார் தேட நிற்பார்; தேர்ந்தவரையும் தேட வைப்பார்; பணிவு இலாதவருக்கு அரியாய் நிற்பார்; பத்தியிலாத சுமடர்தம் சோதனைக்கு அகப்படார்; பதினெண் கணமும் உணராவகை நின்றார்; பொய்யடியா ருள்ளத்தே பொருந்தார்; போற்றி யென்னாதவருக்கு அருளார்; யார்க்கும் நண்ண லரியார்; யாரொடுங் கூடிலர்; வணங்காரிடம் பிணங்குவர்; விண்ணவர் இவரைக் கண்டிலர். திருவடியிணையைக் காணும் சித்தம் இலாதார்க்கு ‘இல்லை’ எனவே திகழ்வார். ஓதிவந்த வாய்மையரும் அவரை உணர்ந்துரைக்க இயலாது.

44. யாருக்கு எளியர், அணியர் [124 (210)]:- அழுது தொழும் அடியார்களுக்கு இறைவர் எளியவர்; ஐம்புலன் வென்றவர்க்கும், நல்ல அன்பர்களுக்கும், பிரியராய அடியார்களுக்கும், புகழ்வார்க்கும் அணியர். தம்மைப் போற்றும் ஆசை கொண்ட நாவுடையாரே அவரை அறிதலாகும்; அவரைத் தொழுது சிந்திப்பவர்க்கு அவர் அருளுவர். ஓதி யுணர்வார்க்கு உணர்வு தருவர். கீதம் பாடி அவரை அடைதலாகும். நாற்றிசைக்கண்ணும் உள்ள பற்றற்றவருக்கும் தம்மை ஓதினவர்க்கும் அருளுவர். தொண்டர் மலர்கொண்டு தொழுதேத்த நண்ணுவர்; விரும்பி வழிபட்டால் நமது ஆவியைவிட்டு நீங்கார்; இன்னரெனப் பெரிதும் அரியராயினும் ஏத்தச் சிறிது எளியரே.

45. வரம் தருவார் [124 (214)]:- கொடுக்க அரிய வரங்களைக் கொடுப்பர் இறைவர். இசை பாட வரந்