பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

தேவார ஒளிநெறிக் கட்டுரை

தருவார்; ஆயிர வரங்க ளுடையார்; கருதிய வரத்தை அருளவல்லார்.

46. வினை நீக்குவர் [124 (224)]:- அடியாரது மேல் வினை எண்ணில களைவார் இறைவர்; வரும் வினைகளையும் அகல அருளுவர்; ஈசன் எனத் தியானித்து எழுபவருடைய வினைகளுக்கு நாசனாவர்; எத்தொழிலை நாம் செய்திருந்தபோதும் நமது நினைப்பு அவரிடம் இருப்பின், நமது வினைகளுக்குப் பகைவராயிருந்து அவர் உதவுவர். தமது திருவடிகளைச் சிந்திக்கும் அன்பர்தம் வினைகெட அருள் புரிவர்; அவரை ஏத்துவோர் வினை தேய்வது திண்ணம்; காளத்தி என்னுங் தலத்தை உள்ளத்தில் உணர்ந்து தொழுதால் அவர் நமது வினைகளை வாங்குவர். தம்மை மலர்கொண்டு தாள் தொழும் அடியர்தம் வினைகளாம் பகையை அழிப்பர். நமது தீவினைகளை ஒழிக்க அவர் மருந்தாவர். தமது தீவினை தீரத் தேவர்களும் அவரை ஏத்துவார்கள். தீவினை தீர்க்க நின்றவர் அவர். அவர் நாமத்தை நாம் பரவினால் நமது வினையை அவர் தீர்ப்பார். பசு பாச வேதனை என்னுங் தளைகளைத் தவிர்க்க அருளும் தலைவரவர். நமது பழவினைகளைத் தீர்த்தருளும் பண்பாவர். நமது பந்தங்கள் நீங்க அருளும் பரமாவர். நமது பாசங்களைக் களைபவரவர். புத்தியைத் தம்மிடம் வைத்து நினைப்பவர்தம் வினையைத் தீர்க்கும் பொருளாம் பேரொளியாரவர். வினைகள் சிதறி ஒடச் செயும் நெறியருள வல்லாரவர். வினைகளைச் செற்று உலகின் தாய்போல உதவ வல்ல தன்மை வாய்ந்த தலைவரவர். வினையினின்றும் விடுதலை காட்டும் தந்தை யவர்.

47. பிற தன்மைகள் குணங்கள் [124]:- இறைவர் அகத்தினர்-புறத்தினர், அகலாத அன்பர், அகலாத செல்வர், அடியார்க்கு இனியர், அடியார் பருகும் ஆரமுது, அந்தணாளர் தம் தந்தை, அமரர்க்கமரர், அமுதர், அருளாய செல்வர், அரையிற் கலையிலாதார், அவனிக்குத் தாயெனநின்றவர், அழகியது அறிபவர், அழித்தற் கடவுள், அற்றவர்க்கு அற்றவர், அற்றவர்க்கு