பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51. சிவனது தன்மை, பெருமை, குணங்கள்

61

நற்றுணை, அறுசுவையாவர், ஆதிரைநாளர், ஆராத இன்பர்; ஆறுபதமும் தோன்ற நின்றார், இகபரம் ஆவர், இணையிலர், இமையோர் கணணாவார், இயலிசைப் பொரு ளானவர், இரக்கமுடையவர், இரவுபகலானவர், இழிவு ஏற்றமானவர், இறுதிநாளிற் புரப்பவர், இன்சொல்லர், இன்பதுன்பங் கடந்தவர், இன்பந் தருபவர், இன்ப முற்றும் அவரே, உடனாவர், உண்ணிலா ஆவி ஆனார், உணர்வாவர், உணர்வருவகையினர், உத்தமர், உம்பர் பெருமான், உயிர்கட்கமுது, உயிர்கட்குயிரானார், உயிராய தன்மையர், உருகில் உவகைதருவார், உலகவர் , உலகழியத் தாம் நிற்பார், உலகின் தாயனார், உலகுக்குக் கருத்தானார், உலகுக்குயிரானர்; உலகெலாம் சாய நின்றார், உற்றவரென்றிலர், ஊறுதேனவர், ஊன மில்லார்க்கு ஊறு சுவையாவர், ஊனுயிரானார், எங்கும் உள்ளவர், எங்குமாகி நன்றார், எட்டுத் திசையானார், எண்குணத்தர். எண்ணாவர் - எழுத்தாவர், எத்தவத் தோர்க்கும் இலக்காய் நிற்பவர், எல்லாமாயவர், எவ்வுலகிற்கும் கண்ணாவர், ஏழோசையர், ஒருவராய் நின்றவர், ஒருவரே பலவாகின்றார், ஒளியானார், ஒன்றலர், கண்ணாவர், கண்ணும் ஆயிரமுடையார், கதிரோனவர், கதியாளர், கரணமாவர், கருத்தறிவார், கருத்தாவர், கரும்பனையார், கல்வியாய கருத்தர், கலையாவர், கவலையிலார், கள்ளம்வல்லார், கற்பகமாவர், கற்ற நூற் கருத்தாவர், கனியனையார், காக்குங்கருணையர், காமமிலர், காலமாவர், காலனடையா வண்ணம் காப்பர், குண மூன்றுடையார், கும்பிடுவார் தமக்கன்பு செய்வார், குருந்தவர், குழகரவர், குற்றம் இல்லாதவர், குற்றம் ஒழிப்பார், குவிவர், குறியர், கூத்தாடுங் குணமுடையார், கேடிலர், கேடும் பிறவியும் ஆனார், கொடிறனார், கோவணங் கொண்டு கூத்தாடு படிறர், சதுரர், சித்தர், சிறியர், சீதமாவர், சீருடையார், சீலமுடையார், சுற்றமாவர், செஞ்சொல்லார், செம்மை யுடையார், செற்றமில்லாதார், சென்றடையாத் திருவுடையார், சேடெலாம் உடையர், சேயவனவர், தஞ்சமாய