பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

தேவார ஒளிநெறிக் கட்டுரை

தலைவர், தண்ணியர், தத்துவர், தந்தைதாயிலாதவர், தவத்தோர் கடவுள், தவவழி அருளுவர், தன்னடைந்தார் தம்பிரான், தன்னேர் பிறரில்லார், தன்னை நினைப்பார்க்கு அமுத நீழலாவர் - இன்பங்கள் தருவார், தன்னொப்பிலாத தூயவர், தன்னொப்பிலாதவர், தாணுவாய் நின்ற பரதத்துவர், தாயுந் தந்தையுமானார், திங்களாவர், திருத்தர், தீங்கரும்பு அனையர், தீயதில்லார், தீயானார், தீர்த்தமெலாம் சடையிற் கொண்ட தேவர், துயர் நோயிலாதவர், துளக்கம் இலாதவர், துறையவர், துன்பம் அழிப்பவர், தேசமெல்லாம் திரிவர், தேவர்க்குங் தேவர், தேவர் பிரான், தேவியோடும் வேறாவர்--உடனாவர், தேனினுமினியவர், தேனும் அமுதுமானார், தேனொத்தவர், தொழப் படுவார், தொழிலவர், தொழுபவர் நாயகன், தோற்றம் - இறுதி யாக்கியவர், நக்கம் ஏகுபவர், நல்லர், நல்லநெறியார், நல்வினைப் பயனாவர், நலங்களாவர், நன்றுடையார், நன்னெறியாவர் நாணிலராய்ப் பலிபேணுவார், நிகரில்லார், நித்தர், நிலையவர், நிறையவர், நினைவார்க்கு இனியர், நினைவார்க்குத் தாய்,நினைவார் வேடத்தவர், நீங்கா அன்பினர், நீங்காத தவத்தர், நீதி உருவர், நீதி பலவுந் தன்னுருவாய தவன், நீதி பல வோதுவார், நீதியர், நுண்ணியர், நூற் கருத்தவர், நெடியர், நெடுந்தகையர், நெதியர், நேர்மையர், நொடியுடையார், நோக்கு ஆயிரமுடையார், பசியிலார், படிறர், பணிசெய்பவர்பால் மகிழ்பவர், பரக்கு மாண்பினர், பரதத்துவர், பரமானார், பருமைகொண்டவர், பலி உண்பதல்லால் வேறுதனமிலார், பலிகொளும் நீர்மையர், பாடி நின்றாடுவர், பாடுவோர்க் கருளுவார், பாமாலை உடையார், பாலர், பிணியில்லவர், பிரான், பிறையவர், புண்ணியர், புயலவர், புலனைந்தையும் வென்றவர், புலையாயின களைவர், புறத்தினர், பெரியர், பேரருளாளர், பொழிலவர் , பொறையவர், பொன்னானவர், போற்றப்படுபவர், மணாளர், மதுரமுடையார், மலம் தீர்ப்பார், மலையவர், மழையவர், மழைபொழி சடையர், மறைகள் முற்றுமாயினர் - வேறானார்; மாய