பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53. சிவபிரான் நடம் - ஆடல்

63

மவர், மாயவனவர், முத்தியாய் நின்றவர், முத்து-பவளம்-மாணிக்கம் -முழுவயிரம் ஆவார்; முதல்வர், முன்பர், முநிவர் குழுவொடு சேருபவர், முனிவு இலார், முழுது மாகிய மூர்த்தி, மூப்பிலர், மூலமாய முதல்வர், மூவுலகுக்கும் மூர்த்தி, மூன்று காலமும் தோன்ற நின்றவர், யாரொடுங் கூடிலார், யாவையுமாய ஈசர், வணங்கப்படுபவர், வாழ்க்கையாவர், வாழ்த்தப்படுபவர், வானுளோர்க்குப் பற்றாவர், விதியாவர், விரிவர், விருத்தர், விளைபொருள்களாவர், வினையாவர், வீட்டுநெறி காட்டுபவர், வெம்மையவர், வெள்ளியவர், வேத வேதாந்தர், வேறாவர்.

52. தன்மை ஒன்றுக்கொன்று எதிர்மறையாம் பொருளினர் இறைவர் [104]

இறைவர் அணியர் -சேயர்; அந்தமாவர் - ஆதியாவர் ; அரியர் - எளியர்; ஆணாவர் -பெண்ணாவர்; ஆணலார் - பெண்ணலார்; ஈறாவர் - முதலானவர்; சீதமாவர் - வெம்மையாவர்; துன்பமாவர் - இன்பமாவர்; தோற்ற மாவர் - ஈறாவர்; நல்லர் - தீயர்; நெடியர் - குறியர்; பருமையர் - நேர்மையர்; பிரிவார் - புணர்வார்; பிறப்பாவர் - இறப்பாவர்; புறத்தினர் - அகத்துளர்; பெரிதரியர் - சிறிதெளியர்; பெரியர் - சிறியர்; பெருமையர் - சிறுமையர்; மண்ணினர் - விண்ணினர்; விரிந்தவர் - குவிந்தவர்; விருத்தர் - பாலர்; வேறாவர் - உடனாவர்.

53. சிவபிரான் நடம் - ஆடல் [126-170]

சிவபிரானுக்கு ஆடலில் விருப்பம், அவர் மண்ணும் விண்ணும் புடைபட ஆடுவர். ஒத்துக்கு ஒப்பத் துள்ள மிதித்துக் கொட்டுடன் ஆடுவர். வட்டணை ஆடல் ஆடுவர்; மிகச் சுழன்று ஆடுவர் திசைநிறைய ஓங்கி ஆடுவர். ஒப்பிலா நடமாடுவர். சொக்கம், பண்டாங்கம், புயங்க ராகம் என்னும் ஆடல்களை ஆடுவர். நாத ஒலியுடன் ஆடுவர். அவருடைய ஆடலெல்லாம் அருட்காரணம்