பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

தேவார ஒளிநெறிக் கட்டுரை

பற்றியே. அவர் உமையுடன் ஆடுங்காரணத்தை ஆடுங்காரணத்தை ஆய்ந்தறிந்தவர் எவரும் இல்லை.

அவர் அரையில் அரவு அசைத்து ஆடுவர், அரவம் பூண்டு ஆடுவர், கையில் ஆடரவு விளங்க ஆடுவர். அஞ்சும்படியான சுடலையில் நாரிபாகமாக அனலேந்தி ஆடுவர்; பாடுவர். பகலிலும், அந்தியிலும், சந்தியிலும், மாஅலையிலும், இரவிலும், இருளிலும், நள்ளிருளிலும் கையில் எரியேந்தி ஆடுவர். கோவணமும், கீளும், புலித்தோலும் உடையாக ஆடுவர், நீறுபூசி, ஆறுசூடி, பிறைசூடி ஆடுவர்; இசைபாடி ஆடுவர், மறை பாடஆடுவர், மறைபாடி ஆடுவர், விடையேறி ஆடுவர், வண்டுபாட ஆடுவர், வன்னி-மத்தம்-கொன்றைசூடி ஆடுவர்; சூலம்-மழு-மான் ஏந்தி ஆடுவர்; தலைமாலை யணிந்து - வெண்டலை ஏந்தி ஆடுவர்; கைவீசி ஆடுவர்; கால்வளைத்து வலனேந்தி ஆடுவர்; கழலும், சிலம்பும் ஒலிக்க ஆடுவர்; குழையுங் தோடும் அசைந்து துள்ள ஆடுவர்; அழல் அதிர வீசி ஆடுவர், மறைமுறைப்படி சுலாவழல் ஆடுவர். பேயின் கொள்ளி கைவிளக்காகத் தீயுகந்து ஆடுவர்; சுடலை விளக்கெரிய ஆடுவர். சடைதாழ. சடை சுழல, சடைபெயர்ந்து இடங்கொள ஆடுவர், பாடலுடன் ஆடுவர், சதிவழியே ஆடுவர், பல பாணிபட ஆடுவர், இலயஞ் சிதையாதபடி ஆடுவர். யானையின் உரியைத்தாம் போர்க்கக்கண்டு உமைபேதுற உமையின் சித்தந் தெளிய ஆடினர். காளியின் கோபத்தை அடக்கி உலகின் துயர் களைய ஆடினர். உச்சியிற் கங்கையும் பாகத்தில் உமையுமாகக் கொட்டுடன் ஆடுவர். இசை பாடி ஆடுவர், உமை யஞ்ச, உமை காண, உமை தாளமிட, உமை பாட, உமை இசைபாட, உமை மகிழ ஆடுவர். குழகராய் ஆடுவர், பூதஞ்சூழ ஆடுவர், பூதங்களும், பல்கணப் பேய்களும், சூழவும், நகைக்கவும், பாடவும், பரவவும், வாத்தியங்கள் ஒலிக்கவும் ஆடுவர். பேய்களுடன் ஆடுவர்; இமையோரும், பலகணங்களும், முநிவரும், மறையவரும், மாதர்களும் தொழுது நிற்க ஆடுவர். நந்தி முழவம் கொட்ட, வாணன் முழவம்கொட்ட, ஆடுவர். அவரது நடனத்தின்போது வாசிக்கப்படும் வாத்தியங்கள்:-