பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54. சிவனைக் குறித்த நிந்தாஸ்துதி

65

இடக்கை, கத்திரிகை, குழல், சங்கு, சல்லரி, தக்கை, தாளம், துடி, துத்திரி, படகம், பறை, முழவு, மொந்தை, யாழ், வீணை. கரியை உரித்தும், காளியை வென்றும், திரிபுரங்களை எரித்தும், நஞ்சை உண்டும், ராவணனை நெரித்தும் இறைவன் (வீர) நடனம் விருப்புடன் ஆடினர்.

இறைவன் நடஞ்செய்த தலங்கள்:- திரு அதிகை, கச்சி ஏகம்பம், திருச்செங்காட்டங்குடி, தில்லை யம்பலம்.

54. சிவனைக் குறித்த நிந்தாஸ்துதி [101]

இறைவனே! நீ கள்வன், மங்கை ஒரு பங்கிருந்தும் சடைமேற் கங்கையை வாழவைத்த கள்வன்; இருவர் முன்னிலையில் தீத்திரளாக நின்ற கள்வன்; காட்டில் ஆனையை உரித்த கள்வன், கரியுரிபோர்த்த கள்வன் ; கானிடை உறையுங் கள்வன் ; என் உள்ளங் கவர்ந்த கள்வன்; தொண்டர் உள்ளத்தில் ஆடல்வல்ல கள்வன்; நல்லவன் போலிருக்குங் கள்வன்; கன்னியரைக் கவருங் கள்வன்; கண்டியூர் வீரட்டத்துறை கள்வன்; பிரமனது உச்சித் தலையிற் பலிகொள்ளுங் கருத்துடைய கள்வன்; மனைகள்தோறுங் கையிற் பலியேற்று உண்னுங் கள்வன்; துக்கங் கடந்தவனாயிருந்தும் தலையோட்டிற் பலி கொள்ளும் படிறன்; பிச்சையை யிச்சிக்கும் பிச்சன் (பித்தன்); உனது மற்றைய வாழ்வு நன்றாயிருந்தாலும் தலையில் (தலையோட்டில்) பலிகொள்ளுவாய்; யாவரும் பழிக்க நீ பலி திரிந்துண்ணுவாய்; உனக்கு வேறோர் தனமில்லை; நீ சடையிற் புனலைக் கரந்தவன். அமணர் அஞ்ச அணைந்திடும் வஞ்சன்; மதியைச் சடையில் வைத்த படிறன்; அரக்கன் (இராவணன்) வலியை வாட்டிய தீயன்; நல்லாரும் தன்னைத் தீயன் (தீயை அங்கையில் ஏந்தினவன்) எனப்படுபவன்; நீ நட்டப்பெருமான் (நட்டம்-ஆடல், நஷ்டம்); பாம்பாட்டிய படிறன்; பிறர் பழிக்க உனது முன்னும் பின்னும் பேய்க்கணம் சூழத் திரிபவன்; நீ நாகத்தையும் மதியையும் உடன் வைத்தல் பழிப்புக்கு இடமல்லவா? நீர் மனைதோறும் இரக்கின்