பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56. சிவபிரானது அட்டவீரச்செயல்கள்

67

சிவபிரான் அவர் பூஜைக்கு இரங்கிக் காலன் மார்பில் இதயத்தே புறங்காலால் உதைத்தார்; என் அடியான் ‘உயிரை வவ்வேல்’ என்று உதைத்தார். பாசத்தோடு விழும்படியாக உதைத்தார். ஒரே உதையில் காலன் உருண்டு வீழ்ந்தான், அலறினான், ரத்தப் ப்ரவாஹம் ஓடிற்று. இறைவன் திருவடி சிறிதுபட்டதும் காலன் உயிர்போயிற்று. காலனைச் சிவபிரான் இங்ஙனம் உதைத்த சரிதத்தை எடுக்தெடுத் துரைப்போமாகில் நன்மை பெருகும்.

4. சலந்தரனைத் தடிந்தது [88]:- ‘அரக்கர், அசுரர்’ என்னும் தலைப்பைப்-5 (v)-பார்க்க.

5. தக்கன் வேள்வி தகர்த்தது [89]:- த க் க ன் அறிவிலான், மதிகெட்டவன், சுற்றமும் மக்களும் நிறைந்தவன், சிவபிரானுக்கு மாமனாராவன்; தக்கன் உமையை யிகழ்ந்தான், அதனாற் சிவபிரான் உமையின் பொருட்டுத் தக்கன் யாகத்தை ஊமைகண்ட கனாப் போலக் கோலாகலமாக்கிச் சிதற அடித்து அழித்தார். விதிர் விதிர்த்த அத்தக்கன் தலையை அறுத்து முத்தீயில் இட்டார். சந்திரன், இந்திரன் , சூரியன், எச்சன், அக்கினி, இமையோர், அமரர்கள், நாமகள், பிரமன், இவர்களையும் விதிவழியே தண்டித்தார். இங்ஙனம் தண்டனைபுரிந்து தக்கனுக்கும் ஏனையோர்க்கும் அவரவர் பாபத்தை யொழித்துப் பின் அருள்புரிந்தார்.

இறைவன் இவ்வண்ணம் வேள்வியை முனிந்து அழித்த பரிசைப் பகர்வோமாக.

6. திரிபுரம் எரித்தது [90]:- i. முப்புரங்கள்: முத்தர அசுரர்கள் - அரக்கர் குலங்கள் நெருங்கிய அழகிய மா நகரங்கள்; வானில்-அந்தரத்தில் - திரிவன, ஒடுவன, மதில்களாற் சூழப்பெற்றன; மாடங்கள் நெருங்கியன; காவல் மிக்கன; பழையன; பெரியன; வலியன; வாலியன; எதிரிலாதன; நேரிலாதன; நெடுவிசும்பில் நெருக்கி உலாவுவன; நினைக்கும் அளவில் பிறரை நலிவன; வரத்தால் உரமுற்றன; கொடிய போருக்கு உற்றன.