பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

தேவார ஒளிநெறிக் கட்டுரை

ii. மும்மதில்கள்:- இவை விண்ணமர்ந்தன; இணையிலாதன; செம்பினாலாயன; செம்பொனாலாயன; நெடுமாடங்களையும் மலையன்ன மாளிகைகளையும் சூழ்வன; கொடி விளங்குவன; படையுடையன; போருக்கு உற்றன; காவல் பூண்டன; சேணில் (வானில்) உலவுவன; பேர் பெற்றன; அஞ்சாதன; திரிவன; நெடியன; பழையன; வலியன; பொருவன; வீண் அடைந்தன.

iii. திரிபுராதிகள்:- இவர்கள் முத்தரத்தினர்கள்; எண்ணிலோர்கள்; அரக்கர், அசுரர், அவுணர், தானவர், நிசிசரர் எனப்பட்டுள்ளார்கள்; செங்ககண்ணர்கள்; மின்னல்போன்ற வெண்பற்களை யுடையவர்கள்; வலிய புயத்தினர்கள்; அரிய திறல் வாய்ந்தவர்கள்; தவத்தினர்கள்; வரம் பெற்றவர்கள்; தேவர்களாலும் எதிர்க்கப்பட முடியாதவர்கள்; இளையாத வென்றி வாய்ந்தவர்கள்; களிபூண்டவர்கள்; அளவுபடாத கொலைத் தொழில் வாய்ந்தவர்கள்; போருக்கு உற்றவர்கள்; தருக்கினர்கள், தீயர்கள்; வினை பெருக்குபவர்கள்; திருந்தார்கள்; வலியர்கள்; மாறுகொண்டவர்கள்; மிக்க வெம்மை கொண்டவர்கள்; வளையாதவர்கள்; தம் பலம் அறியாதவர்கள்.

iv. திரிபுராதிகள் செய்த கொடுமை, அவர்களின் வீரம், குணம், செய்கை:- திரிபுராதிகள் எட்டுத்திக்கிலும் உள்ள பல இடங்களுக்குஞ் சென்று போர்செய்து வெற்றி பூண்டு உம்பர்களும் அஞ்சும்படியான வலிமை கொண்டிருந்தார்கள். எரிபோல எழுந்து உலகை நலிந்தார்கள். எமக்கு எதிரிலை என்று மண்ணிலும், விண்ணிலும் அடர் த்துச் சென்றார்கள். தேவருலகையும், மனிதருலகையும் நினைக்குமளவையில் நலிவு செய்தார்கள். தேவர்கள் அச்சுறும்படி வெம்மைப் போர் தேடிப் புரிந்தார்கள். வரம்பெற்று வன்மை புரிந்தார்கள். அவர்கள் வஞ்சகர்கள்; நன்மையிலார்கள்; புன்மையுளார்கள்; மகா கோபிகள் ; கொலைக் கணக்கு இலாதவர்கள்; இறைவனை நினையாதவர்கள்; தொழாதவர்கள்; இறைவன் பாதத்தை ஒதாதவர்கள்.