பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56. சிவபிரானது அட்டவீரச் செயல்கள்

69

v. திரிபுரம் எரித்த காரணம்:- வெம்மை மிக்க திரிபுராதிகள் அடாத காரியங்களைச் செய்தார்கள், மண்ணையும் விண்ணையும் நலிவித்தார்கள், விண்ணோர் தமது விறலழிந்தனர். இந்திரன், பிரமன், மால் முதலான தேவர்கள் - “கல்லால் நிழலாய்! சந்த்ர சேகரா! நீல கண்டா! எங்கள் இடர்களையாய்” என்று எல்லா மொழியாலும் இறைவனைத் தொழுதேத்தினார்கள். இறைவன் இரக்கங்கொண்டு பலகணங்களும் தம்மைத் தொழ, தேவர்கள் பன் மலர்தூவிப் பணிந்தேத்த, பாரோர் வணங்க, உலகை உய்விக்கும் பொருட்டும், உலகு நன்மைபெற வேண்டியும், பாவங்கள் தீர்தரவும், நல்வினை பெருகவும் திரிபுரங்களை முனிந்தார், சிரித்தார், விழித்தார், எரித்தார்.

vi. போர்க் கோலம்:- அண்டமளாவும் இரும் பொன்மலையான மந்த்ர மேருமலையே வில்; ஒப்பற்ற பெரிய உருவத்தையும் தழல்வீசுங் கண்களையும் பெற்ற வாசுகி யென்னும் மாநாகமே நாண்; அம்பு-அக்கினி, காற்று, அரி; அம்பின் ஈர்க்கு-காற்று; தேவர்களே தேர்; மறைகளே குதிரை; அயனே சாரதி.

vii. திரிபுரத்தை யழித்த வகை:- திரிபுராதிகளை வெகுண்டு நோக்கினார், அதிகோப நெற்றியரானார், மலை யாகிய சிலையைப் பிடித்தார், வளைத்தார், ஒரம்பை எய்தார், புரமூன்றை எரித்தார்.

அம்பு எய்தவகை:- இமயமெல்லாம் இரிய எய்தார், மான்கொண்ட கையால் (இடது கையால்) தேவியின் திருக்கரத்தால் புரங்களை எரித்தார்.

புரங்கள் அழிபட்ட தன்மை:- எயில்களை அட்டது திரு நீறு. மும்மதில்களையும் இறைவர் தமது சிறு முறுவல் (புன்னகை) என்னும் தீயினுக்கு உணவாக்கினர். அவை பொடிபட்டு நீறாயின. புரங்களில் தீயெழும்படி இறைவர் விழித்தனர், தீ எழுந்தது, புரம் அழிந்தது, புரத்திருந்த முரணர் பலர் மரணமுற்றனர், புரங்கள் எள்ளளவு பொழுதில் அழிபட்டன எனில், ஒரு நொடியளவில், இறைமாத்திரையில், நினைக்கு நேரத்தில்,