பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

தேவார ஒளிநெறிக் கட்டுரை

இமைப்பளவில், கண்ணாடியில் உழுந்து உரளும் அளவையில், உடனே - என்னலாம். மூன்று புரங்களும் ஒருங்கே எரிந்தன, அவிந்தன.

viii. பேரொலி:- அரவொலி என்ன, வில்லொலி என்ன, அம்பின் ஒலி என்ன-பேரொலிதான்.

ix. திரிபுராந்தகரது திருக்கோலம்:- இறைவர் விடையமர் கோலத்தராய், மாது ஒரு பாகராய், நின்று திரிபுரங்களை எரித்தனர்.

X. திரிபுரம் எரித்துத் தேவருக்கும் மூவருக்கும் அருளியது:- இறைவர் இங்ஙனம் அரக்கர்களைச் சாய்த்து வானவரைத் தாங்கினார்; அடியார்க்கு அருள் செய்தார். பகைவர்தம் முப்புரத்தை எரித்து, அடி பணிந்தவர்களுடைய மேலைக் குற்றங்களை ஒழித்தருளினார். முப்புரங்களை எரித்த அன்று தம் அடி பணிந்த மூவர்க்கு இறைவர் வரம் மிக அளித்தனர்.

xi. திரிபுரம் எரித்த காலம்:- திரிபுரம் எரித்தபின் காமனை எரித்தது - எனக் கூறப்பட்டுளது.

xii. சிவனது அருமை பெருமை:- திரிபுர மெரித்த திறத்தைக் கருதுங்கால் சிவபிரான் பெரிதும் அருமையுடையார் என்பது புலப்படுகின்றது.

7. பிரமன் சிரத்தை அறுத்தது [91]:- தேவர்களுடைய வேண்டுகோளுக்கு இரங்கிப் பிரமனுடைய ஐந்து தலைகளில் உச்சியில் இருந்ததும், விதி வழுவினதுமான பொய்த்தலையைச் சிவபிரான் அறுத்தனர். அங்ஙனம் அறுபட்ட தலையில்தான் அவர் பலியேற்பது. அதுவே அவர் உண்கலமாகும்.

8. யானையைச் சங்கரித்தது [92]:- எண்டிசையோரும் அஞ்ச யானை வந்தது, கடிதாக வந்தது, வெஞ்சின மருப்புடன் வந்தது. அது மலைபோற் பெரிய யானை. உமாதேவி யானை வந்ததைக்கண்டும் அஞ்சினள், அந்த அச்சத்தை நீக்க யானையைச் சிவபிரான் உரித்ததைக் கண்டும் அஞ்சினள், உரித்த ஈர உரியை அவர் போர்த்ததைக் கண்டும் அஞ்சினள். உமையின் அச்சம் நீங்கச் சிவபிரான் விளையாடி நடனஞ் செய்தனர்.