பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57. சிவபிரானது பராக்ரமும் திருவருட்ப்ரசாதமும்

71

[வந்த யானையின் வர்ணனை “யானைத்தோல் போர்வை” என்னும் 38-5 ஆவது தலைப்பின் கீழ்ச் சொல்லப்பட்டுள்ளது].

57. சிவபிரானது பராக்ரமமும் திருவருட் ப்ரசாதமும் [177]

i. சிவபிரான் அருளியது:- அருச்சுனன், ஆனை, இந்திரன், ஐராவதம், கோச் செங்கட்சோழன், சம்பரன், தேவர்கள், தேவி, பாணன், பாலன் (உபமன்யு), மால் ஆகியோர்க்கு அருளினர் இறைவர்; நஞ்சைத் தாம் உண்டு அமரருக்கு அமுதம் அளித்தனர். இந்திரனுடைய சாபத்தை நீக்கி அவனுக்கு ஆயிரங்கண்களை அளித்தார். தேவர்களின் துன்பத்தை விலக்கினார். தேவிக்கு ஒரு பாகம் அளித்தார். (உபமன்யு எனப்பெயரிய) பாலனுக்கு உண்ணப் பாற்கடல் அளித்தார். மாலுக்குச் சக்கரம் அளித்தார்.

ii. தண்டித்தது:- கருடன், அந்தகன், காலன், பிரமன், நாமகள், திரிபுரம், தக்கன், சலந்தரன், யானை, காமன், சந்திரன், இந்திரன், சூரியன், எச்சன், அக்கினி, இமையோர் இவர்களை யட்டனர். வானவர் நடுங்கப் பறவையைச் செற்றனர், காளியின் கதத்தை அடக்கினர், தேவர்களை அடக்கினர்.

iii. வேள்வி தடுத்தது:- இந்திரன் வேள்வி, தக்கன் வேள்வி, மாதவர் வேள்வி, இம் மூன்றையும் தடுத்தார்.

iv. பூசிக்க நின்றார்:- அந்தணர், தேவர், சித்தர், தேவி, மால், பிரமன் இவர்கள் பூசித்துப் போற்ற நின்றனர் இறைவர்.

v. பிற பெருமை:- இமவானுக்கு மருமான், குபோனுக்குத் தோழன் என நின்றார் இறைவர், காளியோ டாடினார். தாருகாவனத்து முநிவர்கள் தம்மை இகழ்ந்து அனுப்பிய மானைத் தமது இடதுகையிற் பற்றி யேந்தினர். முநிவர்களுக்கு உற்ற இடரை நீக்கிக்