பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

தேவார ஒளிநெறிக் கட்டுரை

காத்தருளினர். ஐம்பொறிகளைக் காய்ந்தார். இமைபோர் ஏத்தப் பேருருக் கொண்டார். பிரமனைப் படைத்தார். பிரமனாய் நின்று உயிர்களைப் படைக்கின்றார், அரியாய் நின்று உலகங்களை நிலைபெறச் செய்கின்றார். யாவையும் அழிக்கவும் வல்லார்.

58. ஆல நீழலில் நால்வர்க்கு அறஞ்சொன்னது [99]

ஆத்த மெனத் தமது திருவடியை நாடித் தவஞ் செய்து, ஐம்புலன்களையும் வென்று, உண்மைப் பொருளைத் தந்தருள் என்று வேண்டிப்பணிந்த முநிவர்கள் நால்வர்க்கும் சகல கலைகள், அறம் பொருளின்பம் வீட்டின் இலக்கணங்கள், தோற்றம்-கேடு இவைகளின் வரலாறு, வேதப் பொருள்கள்-ஆகிய எல்லாப் பொருள்களையும், தழைத்து விரிந்த அழகிய கல்லால விருக்ஷத்தின் கீழ்ச், சிவபிரான் உபதேசித்தார் அம் மாதவர்கள் இறைவர் கழலிரண்டையும் முப்பொழுதேத்திய நால்வர்கள், ஐம்புலனும் அழிந்த சிந்தை அந்தணாளர்கள், தவப்பெருஞ் சதுரர்கள், மறை வல்லவர்கள், நூல்களைக் கற்று இறைவனடி கூடுதற்கு விருப்பங்கொண்ட பெரியார்கள்.

59. இருவர் தேட அரியராய்ச் சிவபிரான் நின்ற திருவிளையாடல் [100]

இருவர் என்பது அயனும் மாலும்; இவர்கள் “இருந்தவன், கிடந்தவன்”, “பூவினான் - தாவினான்” எனப்பட்டார்கள். இவர் தாம் அருந் திறத்தவர், சுருதியார், விண்ணுளார், நிலையிலார்; இவர்கள் மத்தங் கொண்டார்கள், கர்வம் கொண்டார்கள்; தத்தம் பெருமையைப் பேசி வாதுசெய்தார்கள், துள்ளிச் செருச் செய்தார்கள், மற்போர் புரிந்தார்கள், இவர்களுடைய கலாத்தை நீக்கச், செற்றத்தைத் தணிவிக்கத், துன்பத்தை நீக்க இவர்கள் இருவரின் நடுவில் இறைவர், பவளத்திரள்போலத், தீத்