பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62. சிவபிரான் பலியேற்பது

75

முழு நஞ்சையும் “தா” என வாங்கி, அதைத் தினையளவாக்கி அதையே இனிய அமுதாகக் (கங்குற் பொழுதில்) உண்டு அதைத் கமது கண்டத்து அடக்கினர். பல உயிர்களையும் இங்ஙனம் காத்து இமையோர் தொழுது நிற்க நட்டமாடினர். தொண்டர்கள் மலர்தூவி ஏத்தினர். இவ்வண்ணம் உண்ணலாகாப் பெரு விஷத்தைக் தாம் உண்டு இறைவர் தமது பரத்தை நாட்டினர். கரிய நஞ்சைக் கண்டத்து அடக்கியதால் இறைவன் கண்டம் “கரிய கண்டம்” - “நீல கண்டம்’ ஆயிற்று. இறைவன் உண்ட நஞ்சு “வஞ்ச நஞ்சு” எனப்பட்டுள்ளது. அது கரு நிறத்தது, அழலைக் கக்குவது, கொல்லுங் தகையது, உண்ணற் கரியது; பரவுங் தன்மைத்தது; பொங்கும் ஆற்றலது. இறைவர் இவ்வண்ணம் தாம் நஞ்சையுண்டு அமுதை அமரர்களுக்கு அருளிக் கருணாகர மூர்த்தியாய் விளங்கினார். நஞ்சைக் கண்டத்தே இறைவர் அடக்கியதும் ஒரு நன்மைப் பொருளதாம். நஞ்சை யுண்டு உலகை அளித்த பெருமான் என நிலத்தவராகிய நாம் அவரைப் புகழ்வதல்லால் அவர் அருமையை நாம் அளக்க வல்லமோ?

62. சிவபிரான் பலியேற்பது [178-182]

சிவபிரானது உண் கலம் - பிரமன் தலையோடு, அவர் பலியேற்பது அடியவர் பொருட்டு.

அவர் பலியேற்கச் செல்லுங் கோலம்:-

அரவு, ஆமை, எலும்பு, ஏனத்தெயிறு, கங்கை, திங்கள் இவை தமைச்சூடி, சடை தாழ, மானும் மழுவும் ஏந்தி, நீறு பூசி, புலித் தோலாடை புனைந்தும், நக்கராயும் கோவண ஆடைமேல் நாகக்கச்சு அணிந்து, யானைத்தோல் போர்த்து, கொன்றைமாலை சூடி, அனலேந்தி, வீதியிற் குறிகலந்த இசைபாடி, பண்பாடி, மறைபாடி யாடி ஒலிபாடி யாடி, கழலுஞ் சிலம்பும் ஒலிசெய, கழல் மேல் அரவாடப், பிச்சையேற்கும் பொக்கணப் பையுடன் தேவியும் உடன்வர, எருதேறி, ஊரிடு பிச்சைக்கே