பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

தேவார ஒளிநெறிக் கட்டுரை

வாய்மூரி பாடுவார். தாளம், வீணை கொண்டு பாடும் இடத்தை விட்டு நீங்கார்.

71. சிவனும் நாளும் [174]

சிவபிரானுக்கு உரிய நாள் ஆதிரை.

72. சிவனும் பாடலும் [215]

இறைவர் ஆடலும் பாடலும் உடையார். அவர் பண்ணிறைந்த பாடல் பயில்வார். அவர் பலிகொள்ளப் புகும்பொழுது நானாதமாகப் பாடுவார்; பலிகொள்ளும் வண்ணம் ஒலி பாடுவர், ஆடுவர்; பாடியும் ஆடியும் பலி தேர்வார். அஞ்சிடத் தக்க இடமாய காட்டில் (சுடலையில்) ஆடல் பாடல்களே விரும்புவர். பாலையாழ்ப் பாட்டு அவருக்கு விருப்பம். அவருக்கு உகந்தபாடல் “இருக்கு” (வேதம்). நால் வேதப் பாடல்களும் பாடுவர். ராவணனது பாடலைக்கேட்டு மகிழ்ந்து இறைவர் அவனுக்கு வாள் ஒன்று கொடுத்து அவனை மகிழ்வித்தார். பூதப் படைகள் தம்மைச் சூழ்ந்து பாட இறைவர் ஆடுவர்; வண்ணங்களை மகிழ்ந்து பாடுவர். அவர் பாடும் பண் "தாரம்”. அவர் மறை பாடல் பாடும்பொழுது முழவம், குழல், மொந்தை முழங்கும். இறைவர் திருவடியைப் புகழ்ந்து பெரியோர்கள் பாடும் பாடல்களில் இறைவர் அவை தமக்கு உரிய பொருளாய் அமர்வார்.

73. சிவனும், பூதப்படையும் [342]

சிவபிரான் பூதகணநாதன், பூத நாயகன், பூத முதல்வன்; பல பூதப் படையான், அப்பூதங்கள் ஆந்தை போலும் விழியன, ஏதமிலாதன, கிறிகொண்டன, குடவயிற்றின, குறுந்தாளன, குறள் உருவத்தின, புன் தலையன; பூதஞ்சூழச் சிவபிரான் பலிக்கு ஏகுவர்; பூதங்களும் பேய்களும் அவர்க்கு அடையாளம். பூதஞ்சூழ இரவில் புறங்காட்டில் எரியாடுவர்; திரிவர்; பூதக்கூட்டம் அவரை விட்டுப் பிரியாது. அவரைச் சூழ்ந்து நிற்கும். பூதகணஞ்