பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70. சிவனுந் தாளமும்

79

குழல், தாளம், வீணை, மொந்தை, முழவு ஒலிக்கத் தாம் வாய்மூரிப் பண் பாடுவர், பாலையாழ்ப் பாட்டு அவருக்கு உகந்தது. அவர் ஏழிசையின் பொருள் ஆவர்.

68. சிவனும் உமையும் [212]

சிவபிரான் உமையின் கணவர்; உமையோடும் வேறாவார் - உடனாவார்; உமை மாட்டு அவருக்கு அன்பு-மகிழ்ச்சி - விருப்பம்; சிவன் உமையை விட்டுப் பிரியார். உமை சிவன் மாட்டு அன்பிற் பிரியாள். உமையின் கழல் இறைவன் கையது. தக்கனைச் சாடினவுடன் இறைவர் உமை நங்கையின் பங்கராகக் (பங்கு உடையவராகக்) கருதினர். நாடு தழைக்கவே, உலகில் உள்ள உயிர்கள் இன்பம் புணர்ந்து சுகமுறவே, இறைவர் உமையோடும் கலந்துள்ளார். இறைவர் தேவியோடிருந்து அருள் புரிவர். திருவிழிமிழலையில் விண்ணிழி விமானத்தில் தேவியோடும் உறைகின்றார். உமையுடன் பகலில் திருத்துருத்தியிலும் இரவில் திருவேள்விக்குடியிலும் புகலிடங் கொண்டுள்ளார்.

இறைவர் உமையுடன் (இன்புற்று) அமருந் தலங்கள்:- aம்பர் மாகாளம், ஆலவாய், இடைமருது, ஓமமாம் புலியூர், கயிலை, காழி, கோணமலை, சேறை, பட்டீசரம், புனவாயில், மழபாடி, முதுகுன்றம், வக்கரை, வலஞ்சுழி, வாய்மூர், வீழிமிழலை, வைகன் மாடக்கோயில்.

69. சிவனுந் தமிழும் [213]

இறைவர் பல ஒசைத் தமிழும் அத்தமிழில் உள்ள சுவையும் தாமே ஆனார்; மதுரையிற் சங்கம் நிறுவினர்; தமிழின் பெருமையைப் பேசித் காளம், வீணைமுதலியன கொண்டு பாடுமிடத்தை விட்டு அவர் நீங்கார். அவரது திருவடியே தமிழ்ச் சொலும், வடசொலும் சேரும் இடம்.

70. சிவனுந் தாளமும் [214]

சிவபிரான் தாளத் தொலி பலவும் தாமே ஆனார். தமது கையில் தாளம் உடையார். தாளம் ஒலிக்கத் தாம்