பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

தேவார ஒளிநெறிக் கட்டுரை

(சிற்றம்பலம்), சக்கரப்பள்ளி, தலைச்சங்காடு, துருத்தி, நணா, நல்லூர்ப் பெருமணம், பட்டீச்சரம், பந்தணை நல்லூர், பல்லவனீச்சரம், மயிலை, மழபாடி, மாணிகுழி, வாஞ்சியம், வீழிமிழலை, வெண்காடு, வெண்டுறை, வைகா.

iii. அரக்கன் மலையெடுக்க உமை மறுக்கம் எய்தியதைக் கண்டும், இருவருக்கும் அரியராய் நின்றும், காமனைக் காய்ந்தும், கூற்றை உதைத்தும், தக்கனைச் செற்றும், புரமெரித்தும், யானையை உரித்தும், யானைத் தோலைப் போர்த்தும், ராவணனை அடர்த்தும் - பின் அருளியும் சிவபிரான் மகிழ்ந்தார்.

67. சிவனும் இசையும் [210]

சிவபிரான் இணைப்ரியர்; இசைக்கு உருகுபவர்; பண்ணிசைப் பாடலே அவருக்குப் ப்ரீதி; இசைபாடுவோரிடம் மன்னுவர்; அவரை மிக உகப்பர்; எவ்விட த்தில் தாளம், வீணை, முழவம்,மொந்தை, பாடல் ஒலியுளதோ அவ்விடத்தை விட்டு நீங்கார். சொல்லுதற்கரிய கீதத்தை அருமையாகச் சொன்னால் சிவபிரான் பலவிதமும் மகிழ்ச்சியைக் காட்டுவார். இசை பாடுவோருக்கே அவர் அகப்படுவார். ஏழை யடியார்கள் இசை கூடும் வகையாற் பாடினும் அதுவும் ஈசனுக்கு மகிழ்ச்சியே. அடியார்களது இசைப் பாடலுக்காக அவர்களுக்கு விண்ணுலகு அளிப்பர். இராவணன் தவறுசெய்தும் அவன் இசையாழ்பாடிய காரணத்தால் அவனது துயரை நீக்கி அவனுக்கு வாள் அளித்தார். சிவபிரான் தாமும் பாடுவர். குறிகலந்த இசை பாடுவார், ஏழிசை பாடுவர், நான்மறையை (வேதங்களை) இசையுடன் பாடுவர், பூதப் படைபாடத் தாம்ஆடுவர் , உமையும் தாமுமாகப் பாடுவர், உமை இசை பாடத் தாம் ஆடுவர், பலி தேரும் பொழுதும் இசைபாடிச் செல்லுவர், அவர் திருக்கரத்திற் பண்ணிற் பொலிந்த வீணை உண்டு, அதை வாசிப்பர்; அவர் திருக்கையிற் பறையும் உண்டு, அவர் தண்டு, தாளம், குழல் ஆகிய பலவித இசைக்கருவிகளை உடையார்-அவை தமைப் பயில்வர், பல கீதங்களும் பாடுவர், யாழிசையிற் ப்ரியர்.