பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66. சிவபிரான் விரும்புவன, உகந்தன

77

மூவராய முதல்வர், மொய்ம்பர்; மூவரில் முதல்வனாய் நின்றவர்; மூவரும் இவரே, முதல்வரும் இவரே என மேவுதற்கரிய பொருளாயினர்; பிரமன், மால், ஈசன் என்னும் மூவரும் ஆய முதல்வர்; பிறப்பிலி யென்று மூவரும் முக்கண் மூர்த்தியைத் தொழுவர்.

66. சிவபிரான் விரும்புவன, உகந்தன [207]

சிவபிரானுக்கு விருப்பங் தருவன, தந்தன. பின் வருவன எனக் கூறப்பட்டுள:-

i. அக்கு - அரவு அரையில் ஆர்த்தல், விரும்பும் அடியாரை ஆட்கொள்ளுதல், அரவு ஆட்டுதல் - பூணுதல், அரவும் மதியும் உடன் வைத்தல், ஆடல் - இருளில் ஆடல் - கானகத்தாடல், ஆமை (ஓடு)அணிதல், ஆல நீழலிருக்கை, ஆனை உரிபோர்த்தல், ஆனைந்தாடுதல், இசை, உமை யொருபாகம், எரியாடல், எரியாட்டு, எருக்கமலர், எலும்பாபரணம், ஏன வெண் கொம்பு, ஐந்தெழுத்து, கங்கை நங்கை, கல்லவடம், காடு - சுடு காடு, குழை, கூவிளமாலை, கொன்றைக்கார், கோவண உடை, தலை மாலை, தலை யோட்டில் ஊண், நஞ்சு ஊண், நாள் ஆதிரை, நீறு, பலி பிச்சை, யூண், பாடல் - இசை பாடல் பாலையாழ்ப்பாட்டு, புலித்தோல் உடை, புறச்சமயிகள் - சமணராதியோர்தம் உரை நீத்தல், மத்தமலர், மதி, மலர்கள் - கைதை - நெய்தல் - ஞாழல் - முடப்புன்னை - முல்லைமுகை - கொன்றை ஆதிய, மறை பாடுதல், மறையோர் பாவனை, மால், மான்தோல் போர்வை, யானை உரிப்போர்வை, விடை வாகனம் வேட்டுவக் கோலம்.

ii. சிவபிரான் விரும்பிய தலங்களாகக் கூறப் பட்டவை:- அம்பர், அரதைப் பெரும்பாழி, ஆக்கூர், ஆனைக்கா, இரும்பூளை, இரும்பை மாகாளம், இலம்பையங் கோட்டூர், ஊறல், ஐயாறு, ஒமாம்புலியூர், (கச்சிக்) கம்பம், கண்டியூர், கயிலை, கழுக்குன்றம், கள்ளில், காழி, காளத்தி, கீழ்வேளுர், குடவாயில், குரங்காடுதுறை(வட), கேதீச்சரம், கோகர்ணம், கோடிகா , கோயில்