பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) வழிபடுவர். எங்கள் நா உன்னைப் பாடுகலன்றி வேறு எதை யும் நவிலாது எனக் கூறித் துதித்துத் தொழுவர். எங்கள் துணை நீ என்று நாள்தோறும் தொழுது ஏத்துவர். திருமால், பிரமன், இந்திரன், தேவர், நாகர், தானவர்- ஆக யாவர்க்கும் பெருமான் சிவபிரான். பெருமானே! எங்குற்ருய் என்று வானேர் அவரைக் தேடி (வட) திருமுல்லை வாயிலை அடைவர். .مجس= مم* திரிபுரம் எரித்தபோது சிவபிரான் தேவர்கள் பொருட்டுத் தேர்மிசை கின்ருர். 108. சிவனும் தேவியும் (119) பெருமான் உமாதேவியின் கணவர்; தேவியை விட்டுப் பிரியார் ; தேவியுடன் மாணிக்க மலைபோல விடையின் மேல் வருவார் : சுந்தரர் போகும் வழியில், தமது தேவி யொடும் அவர் எதிரில் வந்து கூடலை யாற் றாருக்குப் போகும் வழியைக் காட்டிய ஒர் அதிசய நிகழ்ச்சியை நிகழ்த்தினர். தேவி விளையாட்டாகத் தனது வளைக் காத்தால் மகிழ்ச்சி யுடன் பெருமானுடைய கண்களை மூட, எங்கும் பேரிருள் சூழ்ந்தது; அந்த இருள் விலக வேண்டித் தமது நெற்றியில் ஒரு கண்ணேப் படைத்து ஒளி பரப்பி மகிழ்ந்தார் ப்ெருமான் ; விஜயனுடைய (அருச்சுனனுடைய) தவத்தை அழித்துப் போர்புரியக், காட்டில் வேடய்ை, ஒரு பன்றி யின் பின் தானும் தேவியுமாய் மகிழ்ந்து சென்று அவனுக்கு அம்பருத்துணி அளித்தனர் பெருமான். தேவியின் தவக் குறிப்பை உணர்ந்து சென்று அவளது குணத்தின் சிறப்பை ன்ேகறிந்து, அவள் விரும்பின வாங்களேக் கொடுத்து அவளை மணந்துகொண்டனர். அந்தத் தேவி கச்சிமூதுாரில் உலகு உய்ய வேண்டி அமைத்த (அறச்சாலை) காம கோட்டம் இருக்கப், பெருமான் ஏன் ஊரிடும் பிச்சையை விரும்புகின்ரு தம்முடைய காதலி ஊர்கள்தோஅம் அறம் செய்யப், பெருமான் ஏனே பலி வேண்டி இல்லங் களின் வாசல்தோறும் கிற்கின்ருர்.