பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) சிவனம் செய்பவர் இவர் என்று தெரிந்திருந்தாலும், வேதியர் செய்யும் வேள்வியில் அலி உண்பவர் இவர் எனத் தெரிந்திருந்தாலும், மான் தோலை உடுத்துப், புலித்தோலைத் தோளில் இட்டு, யானைத் தோலைப் போர்ப்பவர் இவர் என்று தெரிந்திருந்தாலும், குறப்பெண்ணைத் தம்மகனுக்கு மணவாட்டியாகக் கொண்ட ஊக்கமுள்ள கரும சீலர் இவர் என்பது தெரிந்திருந்தாலும், செத்தவர் தலையிற் பலி ஏற்பது தான் இவருடைய செல்வமும் தவத்தொழிலும் என்பது தெரிந்திருந்தாலும், நெஞ்சத்துள் இருக்கும் இவர் வானி லும் செல்வார் என்பது தெரிந்திருந்தாலும், இவர்க்குச் சொந்த ஊர் கிடையாது, ஒற்றிவைக்கப்பட்ட ஒற்றியூர் தான் ஊர் என்று தெரிந்திருந்தாலும், நாம் இவர்க்கு ஆட்பட்டிருக்கமாட்டோம். (y) கோடி என்னும் தலத்தில் இறைவன் தனியாய் இருப்பதைக் கண்டு வருந்தியது (*82) கோடிக் குழகீர்! கடற்காற்ருே கொடிதாய்க் கரைமேல் அடிக்கின்றது; அயலில் குடியிருப்பார் யாரும் இல்லை; இருந்தால் குற்ற மாகுமா! உமக்கு ஆர் துணையாக இங்கு இருந்தீர்; கொடி யேன் கண்கள் உமது இந்த நிலையைக் காண என்ன பாபம் செய்தனவோ! ஊர் ஒற்றியூர் - ஒற்றி வைக்கப்பட்ட ஊர்என்ற குறைபாட்டிேைலா, ஆரூர்-ஆர் ஊரோ-என்ற ஐயப் பாட்டிஞ்லோ அவ்வூர்களே விட்டு அகன்று இங்கே வந்து விட்டீர்; எக்காரணத்தால் தனியே இக் கோடி'யில் வீற். றிருக்கின்றீர்! காடோ பிரமாதமாய் (பயங்கரமாய்) இருக் இன்றது; தேவி அஞ்சும்படி ஆங்தைகளும் கோட்டான் களும் மரப்பொத்திலே ஒன்றுகூடி ஒருபாற் குழற, மிக்க பொல்லாதவரும் கொடியவருமான வேடர்கள் ஒருபாற் சார, இக் கோடியில் (தனியே) வீற்றிருக்கின்றீரே ! பலிகொள்ளும் இடத்திற் குடி ஒன்றும்.இல்லை; வேடர் கள் பலர் கொடிப்வர்கள் கரையில் வாழ்கின்றர்கள்; இங்கே எப்படியோ அன்பாய்க் கோயில் கொண்டீரே. -

  • பதிக எண்.