பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128. சுந்தார் இறைவனிடம் அசதி ஆடல் 97 முன்பு பரவையின் (கடலின்) வயிற்றிற் பிறந்த நஞ்சை : உண்டு அபகாரம் செய்துவிட்டோமே-என எண்ணியோ, இப்போது பாவை’ எனப் பெயர் கொண்ட அவளுக்கு உபகாரம் செய்தீர் ; செய்ததுடன் பரவை (கடல்) ஒரத் திலும் தனியாய் அக் கடலுக்குத் துணையாகக் கோயில் கொண்டீர்; பாகத்தில் ஒரு தேவியைக் கொண்டீர் ; வேறு பத்திர மான இடம் இல்லாத காரணத்தால் கங்கையாளும் உமது ஆகத்திலேயே ஒரிடம் கொண்டுள்ளாள் ; நீரோ (காடுகாள்) வனதேவதையுடன் இந்தக் கோடியி ற் கோயில் கொண்டுள்ளீர். - தேவியையும் ஒருபாகத்தில் வைத்துக்கொண்டு, இரவே துணையாகத், தனியாய் இருக்கின் மீரே! (எனக்கு அச்ச மாயும் வருத்தமாயும் இருக்கின்றது). (vi) அகப்பொருட்டுறையில் அசதியாடினது (*86) பைஞ்ஞ்லி ஆரணிய விடங்கரே ! நீர் சூடுவது கொன்றை; உம் ஊர் காடு; உமது கையில் ஒடு; நீர் அணிவது எலும்பு இந்தக் கோலத்துடன் என்ன செய்யப்போகின்றீர் ; உம்மீது காதல் கொள்பவர் உம் மிடத்திருந்து பெறக்கூடியது யாதுதான் உளது? மாதர்களின் வளைகளைக் கவர்வதே உமது தொழில்: இரவிலும் இந்த (எனது) வீடுள்ள இடம் உமக்குத் தெரியுமே; இங்கே நீர் நடந்து வரவும் கூடுமே. கையில் ஒரு பாம்பு ; அசையிற் கட்டியுள்ளது ஒரு பாம்பு; கழுத்தில் ஒரு பாம்பு; இவை ஒருபுறம் தாழ்ந்து கொங்கத், தேகம் எங்கும் நீர் திருநீற்றைப் பூசியுள்ளீர்; வேதத்தை ஒதுகின்றீர்; பக்குவமாக, சிங்கார கோலத் துடன் நின்று எமது ஊர் பைஞ்ஞ்லி என்கின்றீர். நீர் ஐயம் ஏற்பதின் காரணம்தான் ஏதோ!"சொல்லியருளும்.' --- o பகிக எண். தே. ஒ. க.-I-7