பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98. தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) நீர் சுடுகாட்டில் பேயுடன் ஆடும் வழக்கத்தை விட் டொழியின் ; நீர் ஒரு பித்தரா என்ன ! T. தமிழ்ப் பண்பாடு தெரிந்தவர் தாமே நீர்; அங்கன மிருக்கச், செங்கண் பாம்பு ஒன்று முன்கையில் ஆட, எதிரில் வந்து கிற்கின்றீரே! ஏன் இப்படிச் செய்கின் மீர் உமக்குப் பலி (ஐயம்) நாங்கள் கொடுக்கவும் மாட்டோம் ; கொண்டு வந்து இடவும் முடியாது. பக்கத்தில் ஒரு பெண்ளுேடு வந்து கிற்கின் மீரே ; ஆதலால் காங்கள் பலி கொண்டு வந்து இடமாட்டோம். நீர் நடமின் ; இங்கு கில்லாதீர். (vi) திருமுதுகுன்றப் பெருமானுடன் அசதியாடல் (*48) முதுகுன்றரே ! அந்திப் பொழுதில் திரிந்து அடியாரும் நீருமாய் வீடுகள் தோறும், சந்திகள் தோறும் பலிக்குச் செல்வது தக்க காரியமா ! - அடியாரும் நீருமாய் ஆடி அசைந்து வீடுகள் தோறும் பாடிச் சம்பாதித்த பொருள் எல்லாம் யாருக்காக, உமையாளுக்குத் தானே ! ஒரு மங்கையோடு இடுகாட்டில் கின்று நீர் பிரமாத மாய் ஆடல் செய்வது நன்ரு ! அலுப்பு என்பதே அறியாதவரே ! இப்பிறப்பில் உம்மை ஏத்துவார்க்கு இப்போதே அருள்புரியாமல் மறு பிறப்பில் அருள் செய்வதன் காரணம்தான் யாகோ ! ஏன் திசை திசையாய்த் திரிந்து பலி ஏற்கின்றீர்; இதைக் கண்டால் பிறர் என்ன சொல்வார்; இனிப், பக்தி யுடன் பலி இடுவாரிடம் மாத்திரம் பலி கொள்ளுங்கள். பலிகொள்ள ஊர் ஊராகப் பல ஊர் திரிந்தால் உமது மலரன்ன சேவடி நோவாதோ ! உம்முடைய காகலி (தேவி) ஊர்கள் தோறும் அறம் செய்ய, நீர் பலியிடுமின் என்று வீடுதோறும் விற்பது அழகா ! இஃது என்ன கூத்து !

  • பதிக எண். ا