பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) நலியாமை வேண்டுகின்றேன்; நோய்பிணி வராமை வேண்டு கின்றேன் ; பிறந்தார், நடந்தார், உடுத்தார், இறந்தார் என் லும் பேச்சுடைய உலகச் சூழலினின்.றம் உய்யும் வழியைப் போதித்தருளுக ; மனக்கோலமே பிணக்கோலமாம் வாழ்வு இது. பொன், முத்தம், ஆடை, ஆபரணம், ஆனாம், பட்டு, பொற்பூ, பொற்சுரிகை, காசு, ப்ட்டிகை, கஸ்தாரி, கந்தம், சாந்து, மணிவயிரக்கோவை, கறி, நெய் விரவு சோறு, உடல் விருத்தி, காற்றுப்போல வேகமாய்ச் செல்லவல்ல குதிரை இவை எலாம் வேண்டும். திருவீழிமிழலையில் சம்பந்தருக்கும் நாவுக்கரையருக்கும் காசு அருளிச்செய்தீர்; எனக்கும் அவ்வாறு அருளுக ; பாவித் தொழுவார் பெறும் பண்டத்தை எனக்கும் அருளுக. சண்டி, கண்ணப்பன் இவர்க்கெலாம் அருள்புரிந்து ஏற்றம் கந்திர். அருச்சுனன், பகீரதன், பல பக்கர் சித்தர் களுக்கு அவர்கள் வேண்டியதைத் தந்தருளியுள்ளீர். அடியேற்கும் அவ்வாறு அருளவேண்டும். ஐம்பொறிகளையும் வென்று உன் கிருவடியைப் பெறும் பாக்கியத்தைத் தந்தருளுக. (ii) வரலாற்றுச் சம்பந்தமான வேண்டுகோள்கள் 1. குண்டையூரில் நெல்லுப் பெற்றேன் ; அது திருவாரூருக்கு வந்துசேர ஆள் வேண்டும். உதவி அருளுக, பெருமானே ! 2. கண்ணிழந்த நிலையில் கேட்ட வேண்டுகோள்கள் : பரஞ்சுடரே இரவும் பகலும் உனது பணி செய்வேன்; உனது திருப்புகழை விருப்புடன் பாடிப் பாவுவேன்; அடியேன் படுதுயர் களேயாய் ; உற்றநோய், உறுபிணி தீர்த் தருளுக ; ஒருவன் கோல்பற்றிக் கறகற இழுக்கையை ஒழித்து நீ அருள்புரிவாயாக என் கண்ணுக்கு ஊற்ற 'ஒரு மருந்து கூறுக. என்னுடைய கண்ணுெளியை மறைப் பித்ததுதான் நீதி என்ருல், தக்க ஊன்றுகோலாவது கொடுத்தருளுக. -