பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) பெருமான் எளியேனைப் பொருட்படுத்தி சங்கிலியாரை யான் சேர எனக்குத் திருமணம் செய்வித்தார். 22. (i) திருவாரூரை விட்டுப் பிரிந்திருக்க முடியாமை (51): அறிவிலியாகிய நான் என் ஆரூர் இறைவனே எவ்வாறு பிரிந்திருப்பேன்; எத்தனை நாள் பிரிந்திருப்பேன்; சங்கிலியோடு என்னைச் சேர்ப்பித்த பெருமானை எங்கு அழிந்துபோக, என்ன செய்ய, நான் பிரிந்திருப்பது; என் பக்தி நிலையையும் அடிமை நிலையையும் கைவிடும்படி செய் கின்ற இப் பிறவிநோயின் தன்மையை உணர்கின்றேன். நான் திருவாரூருக்குப் போகத்தான் போவேன் ; போய்ப், பெருமானைத் தொழுவேன். பாவையைத் தந்து என்னே ஆண்டவர் ஆயிற்றே எம்பெருமான். (ii) திருவாரூரில் சுந்தரருக்கு இருந்த பக்தி : நான் கித்தம் கினைந்து உள்ளம் ஏத்திக் கொழுவது ஆரூர்ப் பெருமானுடைய அம்பொற் கழலையே. - 28. கண்ணிழந்து நோயுற்ற நிலையில் முறையிடு (54 முதலிய): பெருமானே! பாலில் பிழுக்கை விழுந்திருந்தால் அதை எடுத்துப் போட்டு விட்டுப் பாலை உபயோகிப்பர்; அதுபோல, வழுக்கி விழுந்தாலும் உன் பெயரை மறவாது சொல்லும் என்னிடம் குற்றம் இருந்தாலும் அதைப் புறக் கணித்து என் கண்ணுக்கு ஒரு மருத்து உரைத்தருளுக. உன்னிடமன்றி வேறு யாரிடம் என் கஷ்டத்தை எடுத் துரைப்பேன். கண்ணில்லாததாலும், உடம்பில் வந்த கோயிலுைம், கருத்தழிந்து உனக்கே நான் பாரமானேன்; உன்னே க் தவிர எனக்கு யார் உறவு; ஒரு பிழை பொறுத் தால் அகல்ை உனக்கு என்ன இழிவு.! உனக்கு ஆளாகப் பிறந்தேன்; நான் காதல்கொண்ட சங்கிலி காான்மாக நான் பொய்யனாய் விட்டாலும் உன் திருவடிப் பற்றில் நான் பிழை செய்ததில்லை ; இங்கனம் உன் திருவடிக்கே ஒன்று பட்ட என்னே என்ன என்ன கூத்தாட்டி வைக்கின்ருய் பெருமானே ! 雳 கூடின பார்வதியை கினேயாது கங்கையை யும் சூடினம்ே! ஆதலால் என் மாட்டு உள்ள குற்றம் உன் னிடத்திலும் உண்டு என்று நானும் சொல்லக்கூடுமே.