பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) மாட்டேன். கினைக்க மர்ட்டேன் ; உனது திருப்புகழைப் பலநாள் வாயினுற்கூறி மனத்தினல் கினைவேன் ; உன்னைப் பாடுதலை ஒழியேன்; உனது அடியார் அடியாருக் கெல்லாம் தொண்டு பூண்டு ஒழுகுவேன் ; உன்னேச் சித்தத்தில் எப்போதும் வைத்துள்ளேன் ; எனது நா, எனது செவி, எனது கண் எல்லாம் நீயே, உன்னை நான் என்று கொல் எய்துவது ! உன்னை மனத்தில்ை அன்பு செய்து இன்பம் எய்தித் தமிழ்ப்பதிகம் பாடினேன் ; நீ என்னே விரும்ப விட்டாலும் நான் உன்னை விரும்புவேன் ; நான் உன்னே மறந்தாலும் எனது நா’-ந ம ச் சி வாய வே-எனச் சொல்லிக் கொண்டே யிருக்கும்; நான் எங்கே போனலும் உன்னை கினைப்பேனயின், கொங்குநாட்டு வழிபறி வேடர் களும் என்னை அணுகி எனது உடையைப் பறிக்க மாட்டார்கள்; நீயே எனக்குத் தந்தை; தந்தையின் தந்தை; எனது பிரான்; எனத் சிரத்தின்மேல் உள்ளாய் நீ; எழு பிறப்பிலும் நீயே எங்கள் தலைவன்; ஏழு பிறப்பிலும் உன்னே நான் மறக்கேன் ; உன் அடிமை நான் ; என்னவன் 虏; என் மனக் கருத்து நீ என் அமுது நீ; என் புகலிடம் 霹, எனக்கு இனியவன் ;ே உன்னே ஏத்தாமல் நான் இருந்தறி யேன்; எனக்கு யேலது வேறு யார் துணை; உன்னே மறந்து நீங்கும் நாளினே என் உணர்வுபோய், உயிர்போய்ப் பாடை மேற் சுமக்கப்படும் நாளாகவே நான் கருதுவேன்; ஐம்பொறிகள் என்னை ஆண்டுத் தம்வழியிற் செலுத்திய போதிலும் நாவிலுைம் வாயிலுைம் உன்னேயே கல்லன. சொல்லித் துதிப்பேன்; ஆதலின் நீ அஞ்சாதே என்று. எனக்கு அபயங் தந்தருள், பெருமானே! உன் அடியார் கூட்டத்தில் நானும் கலந்து இரவும் பகலும் கருத்துடன் உன்னைக் கைகூப்பித் கொழுவேன்; நீர் எம்மைக் கருதா விட்டாலும் நான் உமது திருவடியைப் பாடுதல் 'ஒழிய்ேன்; காணுத கண்களையும் காட்டவல்ல கறைக்கண்டனே ! 彦° காட்டினுல் இன்னும் காண்பேன். -

  • , *, நீ சிலந்தியைச் சோழனுக்கிய தொடர்ச்சியைக் கண்டு அடியேன் புரண்டு வீழ்ந்து உன் பொன்மலர்ப் பாதக்கைப் போற்றி போற்றி என்று அன்போடு பூசித்துப் புலம்புவேன்