பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) 24. கடவூர் மயானம் (58) , மறையோர்கள் ஏத்தும் கலம்; இறைவன் திருப் பெயர் பெரிய பெருமான்.” 25. கடைமுடி (12-8) சிவபிரான் உறையும் கிருத் தலம். 26. GSజు (100] (II அழகிய மலை ; நீர் நிறைந்தது. ஊழிக் காலந்தோறும் மேம்பட்டு விளங்கும் பொன்மலை. 27. கருகாவூர் (47-4) மேகங்கள் தவழும் பொழில்கள் சூழ்ந்த முல்லை. நிலத்துத் தலம். 28. கருப்பறியலூர் (30) இத் தலத்துக் கோயில் கொகுடிக் கோயில் ’ எனப் படும். இத் தலத்தில் நறுமணப் பூக்கள் மலரும்; குளத்தில் எருமை வந்து படியும் : கயல்மீனும், வாளைமீனும் குதி கொள்ளும் ; சோலைகளிற் கண்டவர்தம் கண்குளிரும். படியான கமுகு, தேன் ஒழுகும் குலை கிறைந்த தென்னே, மா, வாழை, பொலிவுற்றன. நறுமணம் வீசும் பொழிற். சோலையில் கனிகள் பல உதிர்ந்தன; கொடிகளில் வண்டுகள் ஆணும் பெண்ணும் ஏறிப் பண் இசைத்தன ; குயில்கள் பாட மயில்கள் ஆடின ; குயில்கள் கூவின. மயில்கள் ஒலித்தன ; கலை மலிந்த தமிழ்ப் புலவர்கள், கற்ருேர் இவர் தம் இடர் தீர்க்கும் தலம் இத்தலம் ; பண்ணுடன் இசைகள் பாடி ஆடி, அன்பர்கள் தரிசிக்கும் தலம் ; ம்ை வினைகள் அற்று ஒழிய மறையோர்கள் பன்னளும் பாடியாடிக், (குற்றேவல்) வழிபாடு செய்யும் தலம். பொய்யே இலாத வாய்மையாளராய் நாடோறும் கவருமல் நீரில் மூழ்கிப், பூப் பறித்து, முப்போதும் இண்டை மாலை கட்டி, இறைவன் திரு. வடியிற் குட்டியும், திருநீறு பூசிப் போற்றிப் பூசைசெய்தும், எரி ஒம்பியும், மறை வ்ளர்க்கும் அந்தணர்கள் வாசம்