பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T50 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) பேரி ஒலி, முழவொலி, பிள்ளைகள் துள்ளி விளையாடும் ஒலி-இவை பெருகி உள்ள தலம்; மண்டபம், கோபுரம், மாளிகைகள், குளிகைகள் (மேல் தளங்கள்) விளங்கும் தலம்; மறையொலியும் திருவிழா ஒலியும் நிறைந்துள்ள தெருக்களை உடைய தலம்; கலைகளே நன்கு அடையப் பெற்றுக் கலியை வாாது தடுக்கவல்ல அந்தணர்களின் ஒமப்புகை மேகக் கூட்டங்கள்போல மேலெழுந்து அழகு தரும் தலம்; காலையிலும் மாலையிலும் கடவுளின் அடி பணிந்து மனங்கசியும் அடியார்கள் பயிலும் தலம். இத்தலத்துக் கோயில் பெருங்கோயில் எனப்படும். விசாலமான கோயில்; பிரமன் முன்பு வழிபடப், பரமன் மகிழ்ந்து அவற்கு அருளிய தலம். 31. கழிப்பாலை (28) தாழை, நீர் முள்ளி சூழ்ந்த கடற்கரைத் தலம்; கடலைச் சார்ந்த கழனியிற் கரும்புகள் நிறைந்திருந்த தலம்; கழி களுக்கு அருகே கெருக்கள் விளங்கின தலம்; கடற் செல்வம் பொலிந்த தலம் ; பெருமான் மகிழும் தலம்; தொண்டு செய்யும் அடியார்களின் வினைகளைப் போக்கும் பெருமான் வீற்றிருக்கும் தலம். - 32. கழுக்குன்றம் (81) காடும் மலையும் கொண்ட தலம்; குளிர்ந்த தலம் ; இக் தலத்தில்-மலேயினின்று இழியும் வெள்ளே அருவிகள் மணிகளையும் முத்துக்களையும் அடித்துக்கொண்டு இறங்கும்; மும்மதங்கொண்ட பெருங்கை ஆண்யானைகள் பெண்யானை களுடனும், (யானைக்) கன்றுகளுடனும் குழ்ந்து திரியும். வண்டினங்கள் (மலர்த்) தேன் உண்டு இன்னிசைபாடி இயங்கக், கானமயில்கள் உலவும் தலம்; அடர்மழை பெய்வ தல்ை நீண்டு உயர்ந்த மூங்கில்கள் முத்துக்களைச் சொரியும்; முலைகள் உண்டு தழுவும் குட்டியொடு குரங்குகள் மலைச் 3. இத் தகத்துக் @æäಢಿànu95 #–ು FTP கொள்ளப்பட்.ே இப்போது ஆலயம் சிவபுரியில் உள்ளது.