பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15-6 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) 47. கோவலூர் (12-1) சிவபிரான் வீற்றிருக்கும் கலம் கோவலூர். 48. கோளிலி (20) *. நீர் வளமுள்ள வயல்களைப் பெற்ற தலம்; கொல்லை களின் வளம்பெற்ற தலம் ; செம்பொன் மாளிகைகள் சூழ்ந்த தலம்; பதினெண் கணங்களும் போற்றி வணங்கும் தலம். இத் தலத்தில் உள்ள கோயில் பெருங்கோயில் களில்’ ஒன்று. -- ol 49. சாத்தமங்கை (89-4) ஒலிக்கின்ற புனல் சூழ்ந்த தலம் இது. 50. சுழியல் (82) இங்குள்ள தீர்த்தம் “கெளவைக் கடல்” எனப்படும். இது முத்துக்களைக் கரையிற் சேர்ப்பிக்கும். இத் தீர்த்தத் தில் மாதர்கள் குடைந்தாடுவர்; இறைவன் திருமேனிப் பெருமான் ” என்னும் திருகாமத்தவர். தெய்விகம் வாய்ந்த முகிவர்கள் தொழுதேத்திய தலம் இது ; இத் கலத்துப் பொழிலில் கேன் உண்டு வண்டினங்கள் பாடும். இத் தலத்துப் பெருமானத் தொழுபவர் உள்ளத்தின் பழுது நீங்கிப் புகழொடு வானத்து உயர்வர்; அரசராவர், திரு வுடன் விளங்குவர் ; இத் தலத்தைப் பல்வகைய காரணங் களால் கினே வார் தமை நமன்தமர் எலியார் ; கினைந்தேத்து பவர் பாசப் பிறப்பறுப்பவர்; திருச்சுழியலில் தொண்டு செய வல்லவர் துயரிலர்; இத் தலத்தை மலராலும் புகை யாலும் வழிபாடாற்றி கினேந்து ஏத்துபவர் புகழ்பெற்ற தவத்திற் சதுரர் ஆவர்; திருச்சுழியலைப் பேரூர் (மேலைச் சிதம்பரம்) எனப் பாவித்து இறைவர் இங்கு விருப்புடன் உறைவார்; திருச்சுழியற் பெருமானது திருநாமத்தைக் கற்பவர் நற்கதி அடைவர்; ஆதலால் அவரை ஏத்துதல் நமது கடமையாகும்; சுழியற் பெருமானுடைய கிருவடியை உண்மையுடன் கினைத்தால் ங்மது வினை எளிதாகத் தீரும்.