பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

It 4 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) உண்டால், என்னைச் சேர்ந்தவர்கள் என்மீது கோபிப் பார்கள் , இங்ஙனம் வந்து உண்பதே இப்போது உங்க ளுக்குத் தொழிலாகிவிட்டது” என்று கூறி அந்த மகள் கவண் கல்லை வீசும் மலை இது. * 68. பழனம் (12-9) சிவபிரான் காதலிக்கும் தலம் திருப்பழனம். 69. பழையாறு (12-5) - கீழையூருக்குப் போகும் வழியில் உள்ளது பழையாறு. 70. பனங்காடு (86) மேகம் படியும் மணிமாடங்களைக் கொண்ட ஊர் வன்பார்த்தான் பனங்காட்டுர், மயில் கிறைந்த சோலைகளாற். குழப்பட்ட ஊர்; மடையில் வாளைகள் பாயும் ஊர்; உலகினர் சேரும் இவ்வூரில் பறையும் சங்கும் எப்போதும், ஒலிக்கும் ; புதுமலர் கொண்டு வழிபடும் அடியார்களின் இசைப் பாடல்கள் எப்போதும் ஒலிக்கும்; பனங்காட்டுர்ச் சிவபிரானே உணராகார் உணர்வும், அறியாதார் அறிவும், சாராதார் சார்வும், கினையாதார் கினேவும், பரவாதவர் பரவுதலும், பேசாதார் பேச்சும், அவர்க்கு அடிமைசெய்யக் குழையாத மனக்குழைவும், பயிலாத பயில்வும்-எதற்கும் பயன்படாதனவாம். 71. பனையூர் (87) இத் தலத்தில் வளர்பொழிலிற் பாடல்வண்டுகள் ஒலி செய்யும் ; பொழிலில் மாதவர்கள் தவம் செய்வர்; கெண்டை மீன்கள் பாயும் ; எருமைகள் மேட்டினின்று 1ᏋᎮ விலையிற் பாயச், சேல் மீன்களும் வாளைகளும் வயல்களிற் பாயும்; கழனிகளில் வாளே பாய, மலங்கு, கயல், வரால் என்னும் மீன் வகைகள் வயல்களிற் குதித்தோடும்; இத் தலத்தில் நறுமணம் கொண்ட செங்கழுநீர், நல்ல மல்லிகை, சண்பகம் - மலிரும் 5. மாதர்கள் நீரிற் குடைந்து ஆடக்,