பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 தேவார ஒளிநெறிக் கட்டுரை (ಕ9) சிவனடியார்கள் எப்போதும் புக்குப் போற்றும் தலம்; தேசத்தில் உள்ள அடியார்கள் வந்து இருபோதும் வணங்குவா. மனமே! நீ மறவாது புனவாயிலை கித்தம் கருதுவாயாக; அங்ங்னம் கினைப்பேன் என்று என்னெடு சபதம் செய்வாயாக. T8. ുഖങ്ങഥ (11) சீரொடு மிகப் பொலியும் தலம் ; பண்ணிசையுடன் பலர் பாட இறைவன் மிக்க விருப்புடன் அமர்ந்துள்ள தலம். 79. பைஞ்ஞீலி (86) வயல்களில் அன்னங்கள் சேரும்; பக்கத்துச் சோலை களிற் குயில்கள் பாடும்; பாடல் வண்டுகள் இசை எழுப்பும்; நீர் பாயும் அகழியில் தாமரை மலரும் ; குருக்கத்தியும் புன்னையும் சோலையில் திகழும்; சோலைகளில் மலர்களின் நறுமணம் வீசும்; சந்தனம், வேங்கை, கோங்கு, அகில், சண்பகம் இவைகளை அடித்துக்கொண்டு வரும் நீர் சூழ்ந்த கலம் பைஞ்ஞ்லி. பக்தர்களும் சித்தர்களும் பாடியாடும் பதி, பாரெலாம் பணிந்து பெருமானைப் பரவும் பதி ; நாள் தோறும் பாடிப் பரவுவார் வினைப்பற்றை ஒழிக்கும் பதி. 80. மண்ணிப் படிக்கரை (22) பல்வகை உயிர்கள் வாழும் தெண்ணிரை உடைய கலம்; இறைவன் வீற்றிருக்கும் தலம்; இறைவனுடைய திருமுடியிலும், அடிமேலும் மலரிட்டுப் பரவித் தொண்டர் கள் தொழுது ஏக்தி ஆடும் கலம். F 81. மயிலை (மயிலாப்பூர்) (39-8) கடலின் துறையிற் கிடக்கும் பவளம் ஒளிவீசி இருளை அகற்றும் பழைய தலம்.