பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) - அடியார் ஐவர். அவர்தாம் (1) "எனதிநாதன், (2) கலிய நாயனர், (3) காரி நாயனர், (4) நேச நாயனர் (5) முருக நாயனர். மற்றைய 58 நாயன்மார்களைப் பற்றிக் கிடைக்கும் விவரங்கள் வருமாறு :- == - 1. அதிபத்தர் : இவர் ஊர் நாகை (நாகபட்டினம்). 2. அப்பூதி : ஒப்பற்ற சிறப்புடையவர், ஆதலால் ஒரு நம்பி எனப் பெற்ருர், 3. அமர்நீதி : இவர் வணிகர். வணிகர் முல்லை மாலைக்கு உரியவர். 4. (அரிவாள்) தாயனுர் : அரிவாள் கொண்டு தம் ஊட்டியை அரியலுற்றவர். அதல்ை (அரிவாள் தாய) அரிவாட்டாய நாயனர் ஆயினர். 5. ஆனுயர் : இவர் ஊர் மங்கை (மங்கலம்); ஆயர் குலத்தினர். i H 6. இசைஞானி : சுந்தாரின் தாயார். 7. இடங்கழி : சிவனடியார்களுக்குத் திரு அமுது கிரம்பச் செய்வித்த பெருந்தகையாதலின் தார் நம்பி’ எனப் பட்டார். 8. இயற்பகை : இல்லை என்ற சொல்லே இலா தவர். 9. இ2ளயான்குடிமாறன் : இவர் ஊர் இளேயான்குடி. 10. உருத்திரபசுபதி: பசுபதி என்னும் இவர் ருத்ர ஜெபம் செய்துவந்த நியமத்தவர். 11. எறிபத்தர் : அடியார்களுக்கு இடையூறு வராது காத்துவந்தவ ராதலின் வேல் நம்பி’ எனப்பட்டார்.

  • என கி.-“பட்டப்பெயர், படைத்தலைவர், மறவன், நாவிதன், சாளுரில் ஒரு வகுப்பு” (Lexicon). இவர் ஈழக்குலச் சான்ருர், எனதிநாதனர், படை பயிற்றுத்தொழிலில் தலைமை சார்ந்தவர்என்பன ப்ெரிய புராணத்தால் விளங்குகின்றன.