பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) பெருமானே ! பிறவாமையே வேண்டுகின்றேன் நான்என்கின்ருர் சுந்தார். 201. புகழ் (219) அந்தமில் புகழ், அருமையாம் புகழ், அற்றமில் புகழ், எண்ணில் புகழ், எல்லையில் புகழ், சீர்கொண்ட புகழ், சொல்லரும் புகழ், திகழ் புகழ், திருப்புகழ், கொல் புகழ், கிறைபுகழ், பரந்த புகழ், பழிசேரில் புகழ், பாயின. புகழ், வியன் புகழ், வீடிலாத புகழ்-என்றெல்லாம் புகழ் விவரிக்கப் பட்டுளது. இவற்றுள் (1) பரமன் பழிசேர்(கல்) இல் புகழான், பாயின புகழான்; வீடிலாக வியன் புகழான்; (2) தேவிஅந்தமில் புகழாள், அற்றமில் புகழாள், எண்ணில் தொல் புகழாள், எல்லையில் புகழாள், பரந்த தொல் புகழாள்; (8) சம்பந்தர் அருமையாம் புகழார் (4) சிறப்புலி நாயனுர் சீர்கொண்ட புகழார்; (5) தொண்டைமான் சொல்லரும் புகழான். 202. பூதம் (220) (சிவனும் பூதமும்-தலைப்பு 117 பார்க்க) ஆளும் பூகங்கள், குறட்பாரிடங்கள், குறட்படை பரந்த பாரிடம்-எனப் பூதங்கள் ஒதப்பட்டுள. 203. பேய் (221) (சிவனும் பேயும்-தலைப்பு 119-ம் பார்க்க) பேய்கள் எரிதலையன ; குழிந்த கண்ணின ; பறை போன்ற கண்ணின ; அகன்ற வாயன ; புலால் வாயன ; மயானத்தில் வாழ்வன ; பிணம் இடு காட்டில் இருப்பன துஷ்ட குணத்தை உடையன; தெள்ளறிவு கொண்டன; அங்கும் இங்கும் திரிவன ; பேயுடன் பழகினும் பிரிதல் துன்பம் தரும் ; (சமண் சாக்கியப் பேய்கள்-என்றும் கூறப்பட்டுளது). 『