பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) வேத தேங்கள்; இருக்குவாய் அந்தணர்கள்-என வேதமும் குறிக்கப்பட்டுளது. 212. மறையவர் (280) ஆறங்கம், மறை நான்கு, வேள்விகள்-இவை பயின் றிருந்த அந்தணர்கள் எரி மூன்றும் ஒம்பும் இடம்-திரு நனிபள்ளி. I கலியின் வலம்கெட, கற்ற நான்மறை விதிப்படி, அழல் ஒம்பப்படும் கலம் வலிவலம். கலியைக் கடியவல்ல அந்தணர்கள் செய்கின்ற ஒமப் புகையால் மேகக் கூட்டங்கள் பரந்துள்ளன போன்ற அழகு விளங்கும் கலம் கலய நல்லூர். கற்பாரும் கேட்பாருமாய் நிறைந்து கலை பயில்கின்ற அந்தணர்கள் வாழும் தலம் கலயநல்லூர். இருக்குமறை ஒதும் அந்தணர்கள் வேள்வி இயற்றிப் பெருகிதிகளை வழங்கும் நகர் கானுட்டு முள்ளுர். திருவிளங்கும் செல்வத்தாய்க் தீ மூன்றும் வளர்த்த திருத்தக்க அந்தணர்கள் ஒதும் நகர் கானுட்டுமுள்ளுர். அந்தணர்கள் வாழும் ஊர் தில்லை. நீதி வேதியர் கிறைபுகழ் கொண்ட உலகில் வாழும் இடம் திருநின்றியூர். நீங்குதற்கரிய வல்வினைகள் விலகி ஒழிய வேண்டிப், பாடியும் ஆடியும் சிவனுக்குக் குற்றேவல் ஒழியாது செய்து எப்போதும் வேதம் ஒதும் நாவினர் வாழும் இடம் கருப்பறியலூர். பொய்யாத வாய்மையுடன் திருநீறண்கிந்து போற் றிசைத்துப் பூசை செய்து, எரி ஒம்பி, மறை வளர்க்கும் அந்தணர்கள் வாழும் ஊர் கருப்பறியலூர். f: Ko