பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.34 தேவ்ார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) 215. முகஸ்துதி (288) . சுந்தார் காலத்தில் செல்வர்களிடம் புலவர்கள் பொருள் வேண்டி முகஸ்துதிசெய்த வகைகள் 1. ஒர் எள் கீழே விழுந்தாலும் அது எங்கே என்று தேடிப் பார்க்கும் இயல்புடையாரையும், ஈக்குக்கூட (ஒரு சிறிதளவு உணவு) கொடுக்க மனமில்லாதவரையும் "வள்ளலே, மைந்தனே' எனத் துதித்தல். 2. கல்லாத மூடனைக் கற்று நல்லன் எனத் துதித்தல். 3. கிலம் பெரிதுடையவன், காமதேவனே ஒப்பவன் நீ என்று போற்றுதல். 4. குலமிலா கவனக் குலவன் என்று சிறப்பித்தல். 5. கொடுக்கிலா கானைப் பாரி வள்ளல் நீ என்று பாராட்டுதல். 6. சுற்றத்தாரைப் பேணுபவன், விருந்து ஒம்புபவன் நீ எனப் புகழ்தல். 7. பெண்களுக்கு நீ ஒரு காமதேவன், மிக்க அழகன், முருகன் என வியந்து கூறுதல். 8. கிழவனே நீ இளைஞன் என்றும், மெய்களர்ந்து நடுங்கும் கிழவனே நீ மலைபோலும் தோளை உடையவன் என்றும் பாராட்டுதல். 9. நல்ல குணமில்லாதவனே கல்லன் என்று புகழ்தல். 10. அற்பனை நீ புலவர்க்குச் சிறந்த காய் என விசேடித்துக் கூறுதல். T. 11. நோயாளியை நீ புஜபலம் உடையவன் எனச் சிறப்பித்துக் கூறுதல். T 12. வலின்மயிலாதவனே நீ பீமன், நீ விஜயன் இTஒா உயர்த்திக்காதல்.