பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) 7. பிரமன்' சிரத்தை அறுத்தது (61()) அடக்கமிலாத பிரமனுட்ைய ஐந்து தலைகளில் ஒன்றைப் பெருமான் விரைவில் அறுத்து அப் பிரமனுடைய பெருமையைக் குலைத்தார். அறுத்த தலையிற் பலிகொண்டு தேவ்ர்களுக்குக் கமது திருவருளே வெளிப்படுத்தினர்; அறுத்த தலை நிறையத் திருமாலின் ரத்தத்தை ஏற்ஆத், தமது தோள் மிசை எலும்புக் கூட்டினை விளங்கச் சுமித்து *மாவிரத கோலம் பூண்டார். அந்தணன், அயன், பார்படைத்தான், பிரமன், மலரோன், விதி-என்பன பிரமனைக் குறிக்கின்றன. 8. யானையை அட்டது; அதன் தோலை உரித்தது (61(8) (1) யானையை அட்டது எவரும் தடுக்க ஒண்ணுத வகையில் மதத்துடன் வந்த யானே நடுங்கி வருந்தி, அதன் உடலின் மாமிசம் தமது கை நிறைய ஆகும்படி, அதன் ரத்தம் சொட்டச் சொட்ட, அதன் தோலைப் பீறி உரித்தார் இறைவர்; உரித்த உரியைப் போர்த்து மகிழ்ந்தார்; இந்தத் தோல்தான எம்பிரானுக்குப் போர்வையாகக் கிட்டியது? இவ்வண்ணம் உரித்துப்போர்த்த கோலாகலத்தைக் கண்டு தேவி மனங் கலங்கினள், நடுங்கி அஞ்சினள்; பாகத்தில் இருந்த தேவி அஞ்சயானேயின்கோலை உரித்தார், போர்த்தார். அங்ங்னம் கேவி அஞ்ச யானையை அட்ட காரணம் யாதோ! அத்தி, ஆனை, கரி, களிறு, குஞ்சாம், கைம்மா, பகடு, மதமா, மைம்மா, வேழம்-இவை யானையைக் குறிப்பன. Ii (2) வந்த யானையின் வர்ணனை - பருத்த காள்களேயும், ஆறுபோலப் பெருகி ஒழுகும் மதநீரையும், கொண்ட கொலையானை அது ; போர்க்கு என்றே ம அடிபட்டுக், கொல்லும் எண்ணத்துடன் காட்டிடையே வந்த வலிய கொடிய யானே அது. 虧 e H. H 睡 - H H H * மாவிரதம் - சைவ சமயத்தின் உட்சமயம் ஆறனுள் ஒன்று