பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) H +

  1. 學 i. * - o H - தொள் அரவம், வரிதரு பாம்பு, வாளரா என விளக்கப்

பட்டுளது. பெருமானது சடையில் பிறையைப் பாம்பு தீண்டு கின்றது என்றும், பிறையும், அரவும் புனலும் அவர் சடை மீது விளங்கும் என்றும், ஐவாய் அரவினே மதியுடன் அவர் வைத்துள்ளார் என்றும்; கங்கைப்புனல், வளராத பிறை, வரி அரவு எல்லாம் ஒருங்கே அமைய வைத்துள்ளார் பெருமான் என்றும் விள்க்கப்பட்டுள. - * (5) மலர் வகையுள் ஆத்தி, எருக்கு, காங்கை, குரவு, கூவிளம், கொன்றை, ■ ஆளே, மத்தம், வன்னி-கூறப்பட்டுள. - இவை தம்முள் : எருக்கு - வெள்ளெருக்கு என்றும், கொன்றை - கடிமலர்க்கொன்றை (நறுமணமுள்ள கொன்றை) என்றும், காருரும் கமழ் கொன்றை (கார்காலத்தில் - ஆவணி புரட்டாசிப் பருவம் மலர்வது), கொத்தார் கொன்றை, தார் நிலவு கொன்றை (சரக்கொன்றை), தீமலர்ந்த கொன்றை, பொன்மலர்க் கொன்றை, மதுவார் கொன்றை எனவும்; மத்தம்-வேரி மத்தம் (வேரி-வாசனை) என்றும் விவரிக்கப் பட்டுள. a (6) மாலைகளுள் கூவிளமாலை, காண்மலர் இண்டை கூறப்பட்டுள. 60. சிவபிரான்-அபிஷேகப் பொருள்கள் (71) ஆன் ஐந்து, கயிர், தீ,தேன், நீர்,நீறு, நெய், பால் இவை பிரானுக்கு உரிய அபிஷேகம் பொருள்கள். இவற்றுள் ஆன் ஐந்து (பால், தயிர், நெய், கோசலம், கோமயம்) இறைவ அணுக்கு உகந்தன; இறைவன் ஆடும் மஞ்சனம் (ஊழித்) தீ; நீர்-தெளி நீராகவும், நெய்-நறுநெய் (ಖTಶಿTur67 நெய்) ஆகவும், . பால் மடிப்பால் (அழகிய நல்ல பால்) ஆகவும், நீறு - வெண்ணிறகவும் இருத்தல் வேண்டும். காமதேனு -பால் சொரிந்து ஆட்டி உள்ளது.