பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74s தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) (5) தொண்டைமானுக்கு அருளியது I தான் ஏறிவந்த யானை முல்லைக்கொடியிற் சிக்கிக் கொண்டு நடக்கமுடியாததை அறிந்த தொண்டைமான் அந்தக் கொடியை வாளால் வெட்ட, அங்கு ரத்தம் பரவக் கண்டு, அச்சம் உற்று வருந்தி, அந்த வாளால் தன்னேயே வெட்டிக்கொள்ள முயன்றபோது, இறைவன் வெளிப் பட்டுத் தொண்டைமானுக்கு அருள்புரிந்தார். (ஆர்த வெட்டு அவர் திருமுடியில் ஒரு மணிபோல விளங்குகின்றது; தமது நந்தியைத் தொண்டைமானுக்கு உதவிசெய்ய, அனுப்பி அவன் போரில் வெல்லும்படி அருளினர் பெருமான்.) - (6) நரசிங்கத்தை அடக்கியது இரணியனைச் சங்கரி த் து அகங்காரம் பூண்ட நரசிங்கத்தை அட்டனர் பெருமான். (அந்தச் சிங்க உரியைப் போர்த்தனர்.) 79. சிவபிரான் பலி ஏற்பது ; சிவபிரான் உணவு (91) 1. உணவு (91(1)) சிறப்பாக தூயதான நெய்கொண்டு வட்டவடிவான (ஒம) குண்டத்தில் எரிவளர்த்து ஒம்பி மறை பயின்றவர்கள் அட்ட (சமைத்த) உணவை உண்பர் பெருமான். பொதுவாக ஊரிடு பிச்சையல்லால் உண்பதற்கு அவருக்கு வேறு உணவு இல்லை. 2. பலிக்குச் செல்லும் கோலம் [91(2)] o படைகள் ஏந்திப், பூதங்கள் தம் 'பாகங்களைப் போற்றிப் பாடி, மாதம் தாமும் பலிவேண்டிக், கழலும் சிலம்பும்,ஒலிக்கச் செல்வர்; கோவண உடையுடன், சடைகள்