பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79. சிவபிரான் பலி ஏற்பது, சிவபிரான் உணவு 75. காமு, ஆடிப்பாடி, விடை ஏறிச் செல்வ்ர்; ஆடி அசைந்து அடியாரும் தாமுமாகச் செல்வர் ; ஊர் ஊராகச் செல்வர் ; நல்ல உச்சிப்போதில், மூளியான வெண்டலையைப்-பிரம கபாலக்கைக்-கையில் எந்தித், தொண்டர்கள் பாட, விண் னேறர்கள் ஏக்கக், கணங்கள் குழப், பலவகையான கூத்துடன் கெருவிலும், சந்திகளிலும், மனைகள்தோறும், மனைவாயில் கோம் செல்வர் ; பலிவேண்டிப் பகலெலாம் திரிவர் ; క్స్ల, திரிவர் ; விடங்கராகத் திரிவர்; பண் சீகாமரம் (ாாகம் - நாதநாமக்கிரியை) பாடிச் செல்வ்ர்; அரையிற். கச்சாகப் பாம்பணிந்தும், முன்கையிற் பாம்பு ஒன்றைப் பிடித்தும் செல்வர் ; யானைத் தோலைப் போர்த்துப், பொல்லாத வேடம் பூண்டு, எல்லாரும் காண, இச்சகம் பேசிச் செல்வர். 3.() மடவாரிடம் பலிதேர்தல் மடவார் இடும் பலியைப் பெற, விடங்க வேடம் (அழகிய நக்க உருவம்) பூண்டு, தந்திரமான, இனிய, வஞ்சக வார்த்தைகளைப் பேசி, ஆடியும், பாடியும், செல்வர்; பலியிடும்போது, பலியுடன் மாதர்களில் மேலாடையும் நழுவி விழும். (ii) மடவார் பெருமானைக் கேட்கும் கேள்விகள் முதலிய (91(8)) பெருமானே! நீர் ஆறு தாங்கிய சடையரோ! நும் மேனி அக்திவானத்தின் நிறத்தகோ யானைத்தோல் போர்த் துள்ளிரே எலும்பையும், ஆமையின் ஒட்டையும் பூண் டுள்ளிரே! நீர் பாம்பாட்டவும் வல்லிரோ ஆடல், பாடல் வல்லிரோ பாம்புதான் உமது ஆசமோ தும் ஊர் காடு, அம் கையில் ஒடு, இங்கனம் இருந்தால் உம்மைக் காதலிப் பவர் உம்மிடம் பெறுவது யாது உமது கையில் ஒரு. பாம்பு, அரையில் ஒரு பாம்பு, கழுத்தில்_ஒரு பாம்பு, மெய்யெலாம் திருநீறு, வேதம் ஒதுவீர் ; கீதம் பாடுவீர், இங்கனம் மெதுவாக சக்கராக ஐயம் ஏற்க வருகின்றீர்!