பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"76 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) இஃதென்ன கூத்து , மடவார்களின் H வளைகளைக் கவர்கல்தானே உமது தொழில் : இராக்காலத்தே எங்கள் வீடுதேடி இடம் அறிந்து நடந்து வாவும் வல்லிரோ நீர் ; நீர் - ஏறிவரும் ஏறு முக்காரம் செய்கின்றது ; உம்மிடம் உள்ள பாம்பு மூச்சுவிட்டுச் சீறுகின்றது; பலிக்கு 虏斤 வரும்போது இனிப் பாம்புடன் வரவேண்டாம்' பாம்புடன் வந்தால் காங்கள் உமக்குப் பலி இடமாட்டோம்; பக்கத்தில்,ஒரு தேவியுடன் வந்துள்ளீர்; ஆதலால் உமக்குப் பிச்சை யிடோம்; நீர் நடமின் ; எங்கும் அலையாதீர்; ஒர் இடத்திற் பிச்சை கொள்ளும்; հո- பித்தர் l சுடலையிற் பேயுடன் ஆடுதலை விட்டொழியும்; தக்கை, கண்ணுமை, தாளம், வீணை, தகுணிச்சம், கினை, சல்லரி, கொக்கரை, குடமுழவு, இத்தனே வாத்தியங்களுடன் இசைபாடி ஆடுகின்றீரே ; செந்தமிழ்த் *திறம் அறிந்தவல்லவர்காமோ நீர் ! - 4. பலி சம்பந்தமாகப் பிரானிடம் கேட்கும் ஐய வினுக்கள் முதலிய (91.(4) 1. பெருமானே! அடியாரும் நீரும் இல்லம் தோறும் பாடிப் பெறுகின்ற பொருள் எல்லாம் உமையாளுக்குச் சேர்ப்பதற்குத்தானே! 2. உமது காதலி ஊர்கள்கோறும் அறம்செய்ய நீர் ஏன் பலி வேண்டி மனைவாயில்தோறும் கிற்கின்றீர்! 3. இழிந்த நாய்கள் குலைக்கும் இழிந்த மடவாரின் மனேவாயிலில் நீர் பலிவேண்டி நிற்பதும் ஒரு வாழ்க்கையோ! 4. ஊர் ஊராய் இங்ாவனம் திரிந்தால் மலரன்ன சேவடி நோவாதோ ! -- == 5. அந்திப் போதின் பின் அடியாரும் நீரும் சங்கிகள் தோறும், வீடுகள்தோறும் பலிக்குச் செல்வது தக்கதா! 6. எத்திசையும் திரிந்து பலி ஏற்ருல் பிறர் என்ன சொல்லமாட்டார்கள் ; பக்கியுடன் இடுவாவிடம் மாத்திரம் இனிப் பலிகொள்மின்.

  • திறம் Gಾಘಾ, கற்வு, ஒழுக்கம், கோட்பாடு.