பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முகவுரை


வருகின்றன என்பதைக் காட்ட “ஆராய்ச்சித் தலைப்புக்களும் தலைப்புக் களின் எண்ணும்” என்னும் தனி அட்டவணை ஒன்றும் அச்சிடப்பட்டுளது (பக்கம் i-xlv). இந்த அட்டவணையில் உள்ள 466 தலைப்புக்களில் மேற் சொன்னபடி இந்தப் பகுதியில் 100 தலைப்பு விஷயந்தான் வெளி வருகின்றது. மற்றவை இறைவன் திருவருள் கூட்டி வைக்கப் பொருளும் காகிதமும் கிட்டியவுடன் வெளியிடப்படும்.

(iv) வெளிவந்துள்ள இப் பகுதியில் “ஒப்புமைப் பகுதி” ஒன்று (பக்கம் கக-சுசு) சேர்க்கப்பட்டுளது. அதில் இன்ன தேவார அடியின் கருத்து இன்ன இன்ன நூலிற் காணலாம் என எனக்குத் தெரிந்த வரையிற் காட்டப்பட்டுளது. ஒப்புமைப் பகுதியில் (1) எடுத்தாண்ட நூல்களும் உரிய தேவாரப்பதிக எண்ணும் என ஒரு அட்டவணையும்-பக்கம் (௬௩) (2) காட்டப்பட்டமுக்கிய விஷய அகராதி ஒன்றும் (௬௫) சேர்க்கப்பட்டுள.

(v) ஒரு விஷயம் ஒன்றுக்கு மேற்பட்ட தலைப்பில் வருமாயின், உரிய தலைப்புக்கள் எல்லாவற்றிலும் அது குறிக்கப்பட்டுளது.

.ே இனித் தேவாரத்தைப் பற்றிச் சில குறிப்புக்கள் எழுத விரும்பு வின்றேன். மூவர் அருளிய பதிகங்களுக்குத் தேவாரம் என்ற பெயர் எப்பொழுது வந்தது; யார் அப்பெயரை முதல் முதல் நூலில் உபயோகித்தனர் என்பதை ஆய்ந்தறிய முயன்றேன். ஸ்ரீ சம்பந்தப் பெருமானைப் “பண் மலிந்த மொழியவர்” ' என்றார் அப்பர் (தேவாரம் VI 58-1-வலம்புரம்). “நல்லிசை ஞானசம்பந்தன்” (V11-67-5) “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பு ஞானசம்பந்தன்” (VII-62-8). “நற்றமிழ் வல்ல ஞானசம்ப்ந்தன்” (VII-55-4) என்றார் ஸ்ரீ சுந்தரர். ஆனால் அவர் பாக்களுக்குப் பேர் ஒன்றும் அவர்கள் குறிக்கவில்லை. ஸ்ரீ சம்பந்தர் தம் பதிகங்களைப் பின் வரும் அருமைப் பெயர்களாற் குறிக்கின்றனர்.

திருநெறிய தமிழ் 1-11; அருண்மாலைத் தமிழ் 3-11.
தமிழாரம் 147-11; இசைமாலை 341-11.
மறையிலங்கு தமிழ் 61-11; முடிவி லின்தமிழ் 94.11.

மூவர் காலத்துக்குப் பின் வந்த நூல்களில் ‘தேவாரம்’ என்ற பெயரை முதல் முதல் உமாபதி சிவாசாரிய சுவாமிகள் அருளிய சிவக்ஷேத்திர சிவநாமக் கலி வெண்பாவில்-